Map Graph

நோட்டியம் (பண்டைய நகரம்)

பண்டைய கிரேக்க நகரம்

நோஷன் அல்லது நோட்டியம் என்பது அனத்தோலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு கிரேக்க நகர அரசாகும். இது நவீன துருக்கியில் உள்ள இசுமீருக்கு தெற்கே சுமார் 50 கிலோமீட்டர்கள் தொலைவில், குசாதாசி வளைகுடாவில் உள்ளது. கடல் தெரியும் ஒரு மலை மீது நோட்டியம் அமைந்துள்ளது; இது அருகிலுள்ள கொலோஃபோன் மற்றும் கிளாரோசுக்கு ஒரு துறைமுகமாக செயல்பட்டது. மேலும் யாத்ரீகர்கள் கிளாரோசில் உள்ள அப்பல்லோவின் ஆரக்கிள் செல்லும் வழியில் அடிக்கடி இப்பகுதியைக் கடந்து சென்றனர். இந்த பண்டைய நகரத்தின் மதில் சுவர்கள், நெக்ரோபோலிஸ், கோயில், அகோரா, நடக அரங்கம் ஆகியவற்றின் எச்சங்கள் இன்னும் உள்ளன. நகரத்தின் இடிபாடுகள் இப்போது துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தின் மெண்டெரஸ் மாவட்டத்தில் உள்ள நவீன நகரமான அகமெட்பேலியின் கிழக்கே காணப்படுகின்றன.

Read article