Map Graph

பஞ்சாப் நடுவண் பல்கலைக்கழகம்

பஞ்சாபில் உள்ள நடுவண் பல்கலைக்கழகம்

பஞ்சாப் நடுவண் பல்கலைக்கழகம் இந்திய பஞ்சாபில் பட்டிண்டாவில் அமைக்கப்பட்டுள்ள நடுவண் பல்கலைக்கழகம் ஆகும். இது நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின்படி நிறுவப்பட்டுள்ளது: இந்திய அரசின் "நடுவண் பல்கலைக்கழகங்கள் சட்டம், 2009". பஞ்சாப் நடுவண் பல்கலைக்கழகத்தின் ஆளுகைப்பகுதி பஞ்சாப் மாநிலம் முழுமையுமாகும். ரிசர்ச்கேட் & இசுகோப்பசு நிறுவனத்தின் தரவரிசைப்படி புதியதாக நிறுவப்பட்ட நடுவண் பல்கலைக்கழகங்களில் 2012 முதல் தொடர்ச்சியாக முதலிடத்தில் உள்ளது. நடுவண் பல்கலைக்கழகங்களில் பஞ்சாப் நடுவண் பல்கலைக்கழகத்தில் மட்டுமே விடுமுறைகளோ பருவங்களுக்கு இடையில் இடைவெளியோ இல்லாதுள்ளது. தவிரவும் இங்குதான் துணைநிலை பேராசிரியர்கள் உயிரியளவுகள்-அடிப்படையிலமைந்த வருகைப்பதிவில் பதிகையிட வேண்டியுள்ளது. ஆசிரியர் சங்கம் எதுவும் இல்லை. கல்வியாளர்களுக்கு இரண்டாண்டுகள் பயிற்சிக்காலம் இருப்பதும் இங்குதான் நடைமுறையில் உள்ளது.

Read article