பாக்டியா மாகாணம்
பாக்டியா (Paktia என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. பாக்டியா மாகாணமானது பதிமூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணம் கிட்டத்தட்ட 525,000 மக்கட்தொகையைக் கொண்டதாக உள்ளது. இது பெரும்பாலும் கிராமப்புற, பழங்குடி மக்களை பெரும்பான்மையாக கொண்ட மாகாணமாகும். மாகாணத்தில் பஷ்தூன் மக்கள் பெரும்பான்மையானவர்களாக உள்ளனர், மேலும் சிறிய எண்ணிக்கையில் தாஜிக் மக்களும் காணப்படுகின்றனர். கார்டெஸ் நகரானது மாகாணத் தலைநகராக உள்ளது. மாகாணத்தின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமும் மாவட்டமும் சூர்மாத் ஆகும்.
Read article