பாஞ்ச்சிர் சமவெளி
பாஞ்ச்சிர் சமவெளி அல்லது பாஞ்ச்சிர் பள்ளத்தாக்கு (Panjshir Valley ஆப்கானித்தான் நாட்டின் வடக்கில் தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்த பாஞ்ச்சிர் மாகாணத்தில் அமைந்துள்ளது. இது காபூல் நகரத்திற்கு வடக்கே 150 கிலோ மீட்டர் தொலைவில் இந்து குஷ் மலைத்டொடருக்கு அருகில் உள்ளது. பஞ்ச்சிர் ஆறு இச்சமவெளியில் பாய்கிறது. இச்சமவெளியில் தஜிக் மக்கள் உள்ளிட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.இச்சமவெளி முன்னர் பர்வான் மாகாணத்தில் இருந்தது. 2004-ஆம் ஆண்டில் பர்வான் மாகாணத்தின் பாஞ்ச்சிர் சமவெளியைக் கொண்டு பாஞ்ச்சிர் மாகாணம் நிறுவப்பட்டது.இப்பள்ளத்தாகில் பஞ்ச்சிர் ஆறு உற்பத்தியாகிறது. இச்சமவெளியில் தாஜிக் மொழி மற்றும் பாரசீக மொழிகள் பேசப்படுகிறது. மேலும் இச்சமவெளியில் சுன்னி இசுலாமிய பழங்குடி மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர்.
Read article