பாப்பநாயக்கன்பாளையம்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதிபாப்பநாயக்கன்பாளையம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இப்பகுதிக்கு புதூர் மற்றும் பழையூர் என்று இரண்டு இடங்கள் உள்ளன. 1710 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பழைய பாப்பநாயக்கன் பாளையம் சிதைந்து போனது. தற்போதைய பாப்பநாயக்கன் பாளையம், 1711 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தியதி, பெரியபாப்பா நாயுடு என்பவரால் உருவாக்கப்பட்டது. 1910 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லட்சுமி ஆலைகள் என்ற துணி நூற்பாலை மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனத்தின் துணி நூற்பாலைத் தொகுதி ஒன்று பாப்பநாயக்கன் பாளையத்தில் அமைந்து, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் நிறுவனர் ஜி. குப்புசாமி நாயுடு, பாப்பநாயக்கன் பாளையத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read article
Nearby Places
கோவை புலியகுளம் விநாயகர் கோவில்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு பிள்ளையார் கோயில்

லோக நாயக சனீசுவரன் கோயில்
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஓர் இந்துக் கோயில்

ஜி. டி. கார் அருங்காட்சியகம்
கோயம்பத்தூரில் உள்ள தனியார் கார் அருங்காட்சியகம்

ஐயப்பன் கோயில், கோயம்புத்தூர்
கோயம்புத்தூரிலுள்ள ஓர் ஐயப்பன் கோயில்
இந்திய வான்படை நிர்வாகக் கல்லூரி, கோயம்புத்தூர்
அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயில்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கோயம்புத்தூரில் உள்ள முந்தி விநாயகர் கோயில்
மசக்காளிப்பாளையம்
கோயம்புத்தூரிலுள்ள ஓர் ஊர்
சித்தாபுதூர்
கோயம்புத்தூரிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி