பிர்சா முண்டா பன்னாட்டு ஹாக்கி விளையாட்டரங்கம்
பிர்சா முண்டா பன்னாட்டு ஹாக்கி விளையாட்டரங்கம், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் சுந்தர்கட் மாவட்டத்தில் உள்ள ரூர்கேலா நகரத்தில் அமைந்துள்ளது.பழங்குடியின இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டா நினைவாக இந்த விளையாட்டரங்கத்திற்கு பெயரிடப்பட்டது. 21,000 இருக்கைகள் கொண்ட உலகின் பெரிய ஹாக்கி விளையாட்டரங்கத்தை 5 சனவரி 2023 அன்று ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாய்க் திறந்து வைத்து, நாட்டிற்கு அர்ப்பணித்தார்.இந்த ஹாக்கி விளையாட்டரங்கில் முதன்முதலாக 2023 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் போட்டிகள் சனவரி 13 முதல் 29 முடிய நடைபெற்றது.
Read article
