Map Graph

புத்தூர் நடவடிக்கை

புத்தூர் நடவடிக்கை என்பது தமிழ்நாடு காவல்துறை மற்றும் ஆந்திரப் பிரதேச காவல்துறை ஆகியவை இணைந்து தீவிரவாதத்துக்கு எதிராக நடத்திய ஒரு கூட்டு நடவடிக்கை ஆகும். 2013 அக்டோபர் 5 அன்று புத்தூரில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கும் இரண்டு நபர்களைப் பிடித்தனர். தடை செய்யப்பட்ட அல் உம்மா அமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்தியாவில் மிக அதிகமான பக்தர்கள் வந்து செல்லும் புகழ்பெற்ற கோயிலான திருமலை வெங்கடவன் ஆலயத்தில் குண்டுகள் வைக்க திட்டமிட்டிருந்தனர். சந்தேகப்படும் நபர்கள் "முஸ்லீம் பாதுகாப்பு படை" என்ற பெயரில் சென்னையில் புகழ்பெற்ற ஒரு நபரை கொலை செய்வதற்கான ஒரு திட்டத்தை வைத்திருந்தனர். இந்த நடவடிக்கையினால் அந்தச் சதித்திட்டங்கள் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

Read article