Map Graph

புத்தேரி நயினார் யோகீசுவரமுடையார் கோயில்

நயினார் யோகீசுவரமுடையார் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பகுதியின் புத்தேரி புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஓர் இந்துக் கோயில் ஆகும். குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினரால் பூசை வழிபாட்டு நெறிமுறைகள் கையாளப்படும் ஒரு சமுதாயக் கோயில் ஆகும். இந்து வெள்ளாளர் சமுதாய மரபினரால் பூசைகள் செய்யப்படுகின்றன. நயினார் யோகீசுவரமுடையார் சன்னதி, பூலோவுடைய கண்டன் சாஸ்தா சன்னதி, பூதத்தான் சன்னதி ஆகியவை இக்கோயிலின் வழிபாட்டுக்குரிய இடங்களாகும்.

Read article