Map Graph

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில்

சென்னையிலுள்ள ஓர் இந்துக் கோயில்

மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயில் அல்லது மகாலிங்கபுரம் ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயில்கள் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் நுங்கம்பாக்கம் புறநகர்ப் பகுதியில் மகாலிங்கபுரம் என்ற இடத்தில், 13°03′23.0″N 80°13′54.5″E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 34 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஓர் ஐயப்பன் கோயிலாகும். இக்கோயில் வளாகத்தில் ஐயப்பன் கோயில், குருவாயூரப்பன் கோயில் என்று இரண்டு கோயில்கள் உள்ளன. இக்கோயிலானது, கேரள பாரம்பரிய பாணி கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீசக்கரத்தின் மீது சின்முத்திரையுடன் அமர்ந்த கோலத்தில் சுமார் இரண்டு அடி உயரத்தில் ஐயப்பன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தினமும் நெய்யபிசேகப் பூசை நடைபெறுகிறது.

Read article