மன்னார் வளைகுடா
மன்னார் வளைகுடா என்பது இந்தியப் பெருங்கடலில் இலட்சத்தீவுக் கடலின் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடா ஆகும். இது இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இலங்கையின் மேற்குக் கரைக்கும் இடையில் 160 முதல் 200 கிலோமீட்டர் அகல இடத்தில் அமைந்துள்ளது. தாழ் தீவுகளையும் கற்பாறைகளையும் கொண்ட ஆதாம் பாலம் மன்னார் வளைகுடாவை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அமைந்துள்ள பாக்கு நீரிணையில் இருந்து பிரிக்கிறது. தென்னிந்தியாவில் உள்ள தாமிரபரணி ஆறும் இலங்கையில் உள்ள அருவி ஆறும் மன்னார் வளைகுடாவில் கலக்கின்றன.
Read article