ராஜீவ்காந்தி பல்கலைக்கழகம்
ராஜீவ்காந்தி பல்கலைக்கழகம் இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு பழமையான பல்கலைக்கழகமாகும். முன்னர் இது அருணாசல் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டு வந்தது. மாநில தலைநகரான இட்டா நகரிலிருந்து ஒன்பது மைல் தொலைவில் உள்ள தோய்முக்கு நகரில் ரோனோ மலையில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. 1984ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் இந்தப் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 2005ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி இந்த மாநிலத்திற்கு வருகை தந்தபோது இப்பல்கலைக்கழகம் ராஜீவ்காந்தி பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
Read article