லாஸ் ஏஞ்சலஸ் நினைவு கொலோசியம்
லாஸ் ஏஞ்சலஸ் நினைவு கொலோசியம், ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின், தெற்கு கலிபோர்னியா பிரதேசத்தில் அமைந்த லாஸ் ஏஞ்சலஸ் பெருநகரத்தில் அமைந்த பல்நோக்கு கொலோசியம் ஆகும். 29.2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கொலோசியத்தில் 77,500 முதல் 93,607 நபர்கள் அமரும் வகையில் US$954,872.98 டாலர் செலவில் 1 மே 1923 அன்று கட்டி முடிக்கப்பட்டது. லாஸ் ஏஞ்சலஸ் நினைவு கொலோசியம், லாஸ் ஏஞ்சலஸ் நகரத்திற்கு தென்கிழக்கே 5.1 மைல் தொலைவில் உள்ளது.
Read article