விழிஞ்ஞம் கலங்கரை விளக்கம்
கேரளத்தில் உள்ள கலங்கரை விளக்கம்விழிஞ்ஞம் கலங்கரை விளக்கம் என்பது தென்னிந்திய மாநிலமான கேரளத்தின், கோவளம் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கலங்கரை விளக்கமாகும். இது 30 சூன் 1972-இல் செயல்படத் தொடங்கியது. விழிஞ்ஞம் பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பரபரப்பான துறைமுகமாக இருந்தது. தற்போதைய கலங்கரை விளக்கம் நிறுவப்படுவதற்கு முன்பு, இந்த இடத்தில் கலங்கரை விளக்கங்கள் எதுவும் இருக்கவில்லை. ஒரு காலத்தில் தொலை அடையாளக் குறி 18-ஆம் நூற்றாண்டில் இருந்திருக்க வேண்டும். 19-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, இந்த துறைமுகம் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்தது. அருகிலுள்ள குளச்சலில் 1925-இல் ஒரு கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. பின்னர், 1960-ஆம் ஆண்டில் விழிஞ்ஞத்தில் ஒரு தொலை அடையாளக் குறி அமைக்கபட்டது.
Read article