அங்கம்
பண்டைய இந்தியத் துணைக்கண்ட நாடு / From Wikipedia, the free encyclopedia
அங்கம் (अंग aṅga) என்பது கி. மு. 6ஆம் நூற்றாண்டில் இந்திய உபகண்டத்தில் காணப்பட்ட ஓர் இராச்சியமாகும். இவ்விராச்சியம் அதே நூற்றாண்டில் மகதத்தால் ஆக்கிரமிக்கப்படும் வரை மிகவும் சிறப்பான நிலையில் இருந்தது. அங்குத்தர நிக்காய போன்ற பௌத்த நூல்களிலும் வியாக்கியபிரசினபதி என்னும் சமணநூலிலும் பதினாறு மகா ஜனபதங்களில் ஒன்றாக அங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.