ஆஷஸ்
From Wikipedia, the free encyclopedia
ஆஷஸ் (Ashes) என்பது பழமையான துடுப்பாட்டத் தொடர் ஆகும். தேர்வுத் துடுப்பாட்ட வகையைச் சேர்ந்த இத்தொடர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 1882-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. போட்டிகளின் எண்ணிக்கையில் பல்வேறு மாறுதல்கள் இருந்தாலும் 1998 ஆண்டில் இருந்து ஒரு தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகள் என்ற அளவில் விளையாடப்பட்டு வருகின்றது. இது ஐக்கிய இராச்சியம் அல்லது ஆத்திரேலியா நாடுகளில் நடைபெறும். ஒருவேளை தொடர் வெற்றி/தோல்வியின்றி சமமாக முடிந்தால் அதற்கு முந்தைய தொடரில் வெற்றி பெற்றிருந்த அணி ஆஷஸ் தாழியைத் தக்கவைத்துக் கொள்ளும்.
ஆஷஸ் தாழி | |
நாடு(கள்) | இங்கிலாந்து ஆத்திரேலியா |
---|---|
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
வடிவம் | தேர்வுத் துடுப்பாட்டம் |
முதல் பதிப்பு | 1882/83 (ஆத்திரேலியா) |
கடைசிப் பதிப்பு | 2021-22 (ஆத்திரேலியா) |
போட்டித் தொடர் வடிவம் | 5 போட்டிகள் கொண்ட தொடர் |
மொத்த அணிகள் | 2 |
தற்போதைய வாகையாளர் | ஆத்திரேலியா |
அதிகமுறை வெற்றிகள் | ஆத்திரேலியா (34 முறை) |
அதிகபட்ச ஓட்டங்கள் | டான் பிராட்மன் (5,028) |
அதிகபட்ச வீழ்த்தல்கள் | ஷேன் வோர்ன் (195) |
ஆஸ்திரேலியா |
இங்கிலாந்து அணித்தலைவர் இவோ பிளைக்குத் தனிப்பட்ட முறையில் பரிசாக வழங்கப்பட்ட ஆஷஸ் தாழி தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள எம்சிசி அருங்காட்சியகத்தில் உள்ளது. தொடரில் வெல்லும் அணிக்கு வெற்றியின் அடையாளமாக ஆஷஸ் தாழியின் பிரதி வழங்கபடுகிறது. மேலும் 1998-99 தொடரில் இருந்து ஆஷஸ் தொடர்களில் வெற்றிபெறும் அணிக்கு ஆஷஸ் தாழி போன்ற தோற்றத்தில் வாட்டர்ஃபோர்ட் படிகத்தால் செய்யப்பட்ட ஆஷஸ் கிண்ணம் ஒன்றும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்தொடர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இரு நாடுகளும் 2 ஆண்டுகளில் ஒரு முறை தமது நாட்டில் இப்போட்டியை நடத்தும்.