இஸ்ரேல்
From Wikipedia, the free encyclopedia
இஸ்ரேல் (Israel, எபிரேயம்: יִשְׂרָאֵל; யிஸ்ராஎல்; அரபு மொழி: إِسْرَائِيل, யிஸ்ராஎல், அலுவலக ரீதியாக இஸ்ரேல் நாடு; [மெதிநாத் யிஸ்ராஎல்](எபிரேயம்), [தவுலத் இஸ்ராஇல்](அரபு)) என்பது மேற்கு ஆசியாவில், மத்திய தரைக்கடலின் தென்கிழக்கு கரையில் உள்ள ஒரு நாடு. இது இஸ்ரவேல், இஸ்ரயேல் எனவும் தமிழில் அழைக்கப்படுகிறது. இது வடக்கில் லெபனானுடனும், வடகிழக்கில் சிரியாவுடனும், கிழக்கில் யோர்தானுடனும் மேற்குக்கரையுடனும், தென்மேற்கில் எகிப்துடனும் காசா கரையுடனும், தெற்கில் செங்கடலில் அஃகபா குடாவுடனும் தன் எல்லைகளைக் கொண்டு, புவியியல் ரீதியாக பல மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட அம்சங்களை தன் சிறிய நிலப்பரப்பில் கொண்டுள்ளது.[7][8] இதன் அடிப்படை சட்டத்தின்படி, இந்நாடு யூத மற்றும் குடியாட்சி நாடாக அறிவிக்கப்பட்டு, மக்களாட்சி முறையில் நாடாளுமன்றம் அமைத்து நாட்டை ஆளுகின்றது. இது யூதர்களின் உலகிலுள்ள ஒரேயொரு தாய் நாடாகவுள்ளது.[9]
இஸ்ரேல் அரசு | |
---|---|
நாட்டுப்பண்: கதிக்வா, நம்பிக்கை | |
தலைநகரம் | எருசலேம்[1] |
பெரிய நகர் | யெரூசலம் |
ஆட்சி மொழி(கள்) | |
இனக் குழுகள் (2019) |
|
மக்கள் | இசுரேலியர் |
அரசாங்கம் | நாடாளுமன்ற மக்களாட்சி |
• குடியரசுத் தலைவர் | ஐசக் ஹெர்சாக் |
• பிரதமர் | யாய்ர் லபிட் |
சட்டமன்றம் | கெனெசெட் |
விடுதலை ஐ.இ. இடமிருந்து | |
• கூற்றம் | மே 14 1948 |
• அங்கீகாரம் | 1 மே 1949 |
பரப்பு | |
• மொத்தம் | [convert: invalid number] |
• நீர் (%) | 2.12 (440 கிமி2 / 170 mi2) |
மக்கள் தொகை | |
• 2013 மதிப்பிடு | 8,134,100[2] (96வது) |
• 2008 கணக்கெடுப்பு | 7,412,200[3] (99வது) |
• அடர்த்தி | 387.63/km2 (1,004.0/sq mi) (34வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2013 மதிப்பீடு |
• மொத்தம் | $274.504 billion[4] (49வது) |
• தலைவிகிதம் | $34,875[4] |
மொ.உ.உ. (பெயரளவு) | 2013 மதிப்பீடு |
• மொத்தம் | $272.737 billion[4] (43வது) |
• தலைவிகிதம் | $34,651[4] |
ஜினி (2008) | 39.2[5] மத்திமம் · 66வது |
மமேசு (2013) | 0.888[6] அதியுயர் · 19வது |
நாணயம் | புது இசுரேலிய சேக்கல் (₪) (ILS) |
நேர வலயம் | ஒ.அ.நே+2 (இசுரேலிய நேரம்) |
ஒ.அ.நே+3 (இசுரேலிய கோடைகால நேரம்) | |
திகதி அமைப்பு |
|
வாகனம் செலுத்தல் | வலம் |
அழைப்புக்குறி | 972 |
இணையக் குறி | .il |
29 நவம்பர் 1947 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பிரித்தானிய பாலஸ்தீனத்தின பிரிப்பினை நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்தது. 14 மே 1947 இல் உலக சீயொனிச அமைப்பின்[10] செயற்படுத்தல் தலைவர் மற்றும் இசுரேலுக்கான யூத முகவர் அமைப்பின் தலைவருமான டேவிட் பென்-குரியன் "இசுரேல் தேசத்தில் இசுரேலிய நாட்டின் உருவாக்கம், இசுரேல் நாடு எனப்படும்" என பிரகடனப்படுத்தினார். இச் சுதந்திரப் பிரகடனம் 15 மே 1948 அன்று பிரித்தானிய பலஸ்தீன கட்டளையமைப்பை நீக்கியது.[11][12][13] அடுத்த நாள் அருகிலுள்ள அரபு நாடுகள் இசுரேல் மீது படையெடுக்க இசுரேலிய படைகள் அவற்றுடன் சண்டையிட்டன.[14] அதிலிருந்து இசுரேல் அருகிலுள்ள அரபு நாடுகளுடன் சில போர்கள் ஊடாக சண்டையிட்டு வருகின்றது.[15] இதனூடாக இசுரேல் மேற்குக்கரை, சீனாய் தீபகற்பம் (1967 முதல் 1982 வரையில்), தென் லெபனானின் பகுதிகள் (1982 முதல் 2000 வரையில்), காசா கரை கோலான் குன்றுகள் என்பவற்றைக் கைப்பற்றியது. இவற்றிலிருந்து சில பகுதிகளைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆயினும் மேற்குக் கரையுடனான எல்லை சர்ச்சைக்குரியது.[16][17][18][19][20] இசுரேல் சமாதான ஒப்பந்தங்களை எகிப்துடனும் யோர்தானுடனும் செய்தாலும், இதுவரை இசுரேலிய-பலத்தீன முரண்பாட்டு தீர்வுக்கான முன்னெடுப்புக்கள் சமாதானத்தை ஏற்படுத்தவில்லை.
இசுரேலின் வர்த்தக மையமாக டெல் அவீவ் காணப்பட,[21] எருசலேம் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட இடமாகவும் தலைநகராகவும் உள்ளது.[note 1][22] இசுரேலின் மக்கட்தொகை 2013 இல் 8,051,200 என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 6,045,900 பேர் யூதர்கள். அராபியர்கள் நாட்டின் இரண்டாவது பெரிய மக்கள் கூட்டமாக 1,663,400 பேர் என்ற எண்ணிக்கையில் உள்ளனர்.[2][23] இசுரேலிய அராபியர்களில் பெரும்பான்மையானவர்கள் இசுலாமியர்களாகவும், ஏனையவர்கள் கிறித்தவர்களாகவும் டூர்சுக்களாகவும் உள்ளனர். இவர்களைத்தவிர சிறுபான்மையாக மார்னோயர்கள், சமாரியர்கள், கருப்பு எபிரேய இசுரேலியர்கள்,[24] ஆர்மேனியர்கள், சிர்காசியர்கள் போன்ற இனத்தவர்களும் உள்ளனர். இசுரேல் குறிப்பிட்டளவு வெளிநாட்டு தொழிலாளர்களையும் ஆப்பிரிக்கா, ஆசியாவிலிருந்து புகலிடம் தேடியவர்களையும் கொண்டுள்ளது.
இசுரேல் நாடாளுமன்ற முறை, விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை, பொது வாக்குரிமை என்பவற்றுடன் சார்பாண்மை மக்களாட்சி கொண்ட ஓர் நாடு.[25][26] இசுரேலிய அதிபர் அரசாங்கத்தின் தலைவராகவும் கெனெசெட் இசுரேலின் சட்டசபையின் சட்டமியற்றும் உறுப்பாக செயல்படுகிறது. இசுரேல் ஒரு வளர்ந்த நாடும் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் உறுப்பு நாடும் ஆகும்.[27] 2012இன்படி இதன் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் 43வது இடத்தில் உள்ளது. இசுரேல் மனித வளர்ச்சி சுட்டெண்ணின் அடிப்படையில் மத்திய கிழக்கில் உயர்வாகவும் ஆசியாவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.[28] இதன் குடிமக்கள் ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் உலகில் அதிகம் ஆயுள் எதிர்பார்ப்பு உள்ள குடிமக்களில் உள்வாங்கப்படுகின்றனர்.[29]