இயங்குபடம்
நகரும் படங்களை உருவாக்க கூடிய முறை / From Wikipedia, the free encyclopedia
இயங்குபடம் என்பது சிறுசிறு வேறுபாடுகள் கொண்ட பல படங்கள் வேகமாக இயக்கப்படுவதன் மூலமாக உருவாக்கப்படுவதாகும்.இதை 'அசைபடம்' என்றும் அழைப்பர்.
இயக்கமூட்டல் (Animation) என்பது நிலையான படிமங்களை அடுத்தடுத்துக் காட்சியளிக்க வைப்பதன் மூலம் படத்திலுள்ள பொருள் இயங்குவது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்குவதாகும்.
இயங்குபடங்களை தயாரிக்க இன்று பல மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இயக்கமூட்டலுக்கு 1 நொடிக்கு 24 சட்டங்கள் (frames) தேவைப்படுகின்றன. இயக்கமூட்டலின் முதன்மையான பயன்பாடு எப்பொழுதும் பொழுதுபோக்காகவே இருந்து வந்துள்ளது. ஆனால் இன்று கல்விசார் இயக்கமூட்டல் மற்றும் அறிவுறுத்தல் இயக்கமூட்டல் போன்றவைகளில் இவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகின்றன.