இர்வின் பிரபு
பிரித்தானிய அரசியல்வாதி (1881-1959) / From Wikipedia, the free encyclopedia
இர்வின் பிரபு (The Lord Irwin) (ஏப்ரல் 16, 1881 – திசம்பர் 23, 1959) என்று பரவலாகவும் 1925 முதல் 1934 வரையும் பின்னர் 1934 முதல் 1944 வரை ஆலிபாக்சு வைகௌன்ட்டு (The Viscount Halifax) எனவும் அழைக்கப்பட்ட எட்வர்டு பிரெடிரிக் லின்ட்லெ வுட், ஆலிபாக்சின் முதலாம் பிரபு (Edward Frederick Lindley Wood, 1st Earl of Halifax) 1930களில் பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். இர்வின் பல முக்கியப் அமைச்சகங்களில் பணியாற்றியிருந்தார்; அவற்றில் வெளிநாட்டுச் செயலராக அவர் 1938 முதல் 1940 வரை பணியாற்றியது குறிப்பிடத்தக்கதாகும். இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக ஐரோப்பிய நாடுகள் கடைபிடித்த விட்டுக் கொடுத்தல் கொள்கையை வடிவமைத்தவராக இர்வின் கருதப் படுகிறார். இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானியத் தூதராக வாசிங்டனில் பணிபுரிந்தார்.
ரைட்டு ஆனரபிள் ஆலிஃபாக்ஸ் பிரபு கேஜி, ஓஎம், ஜிசிஎஸ்ஐ, ஜிசிஎம்ஜி,ஜிசிஐஇ, டிடி, பிசி | |
---|---|
1941இல் ஆலிஃபாக்ஸ் பிரபு | |
30th வைசுராயும் இந்தியத் தலைமை ஆளுநரும் | |
பதவியில் 3 ஏப்ரல் 1926 – 18 ஏப்ரல் 1931 | |
ஆட்சியாளர் | ஜார்ஜ் V |
பிரதமர் | இசுடான்லி பால்டுவின் இராம்சே மக்டொனால்டு |
முன்னையவர் | ரீடிங் பிரபு |
பின்னவர் | ஜார்ஜ் கோச்சென் பிரபு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1881-04-16)16 ஏப்ரல் 1881 பவுடர்ஹாம் கோட்டை, டெவோன், இங்கிலாந்து |
இறப்பு | 23 திசம்பர் 1959(1959-12-23) (அகவை 78) கர்ரோபி அரங்கம், யார்க்சையர், இங்கிலாந்து |
தேசியம் | பிரித்தானியர் |