ஈழம்
இலங்கையினை குறிக்கும் பழந்தமிழ் சொல் / From Wikipedia, the free encyclopedia
இலங்கைவாழ் தமிழர்களின் தாயக பிரதேசம் குறித்து அறிய, காண்க தமிழீழம்.
தற்காலத்தில் இலங்கை என அழைக்கப்படும் தீவு பழங்காலத்தில் ஈழம் என அறியப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்ட 'ஈழத்துணவு', 'ஈழத்துப் பூதந்தேவனார்' போன்ற சொற்கள் மேற்படி தீவின் தொடர்புகளைக் காட்டி நின்றன. பழந் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங்களும் ஈழம் அல்லது ஈழ மண்டலம் என்ற பெயரைப் பயன்படுத்தின.