![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/03/Edmundhillarycropped.jpg/640px-Edmundhillarycropped.jpg&w=640&q=50)
எட்மண்ட் இல்லரி
மலை ஏறுபவர் / From Wikipedia, the free encyclopedia
சர் எட்மண்ட் ஹிலாரி (Sir Edmund Percival Hillary; ஜூலை 20, 1919 – ஜனவரி 11, 2008) நியூசிலாந்து நாட்டுப் புகழ்பெற்ற மலையேறுநர்; கொடையாளர் மற்றும் விமானியுமாவார். இரண்டாம் உலகப் போரில் வான்படையில் விமான ஓட்டியாகப் பங்கு கொண்டவர். 1951, 1952களில் இவரின் சோ ஒயு என்ற மலை ஏறும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர் 1958 இல் ஹிலாரி முதன் முதலில் உலகின் தென் முனையை அடைந்தவர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் உலகின் இரு முனைகளையும் (வடமுனை, தென்முனை) அடைந்த முதல் மனிதர் என்ற பெருமையும் பெற்றவர். அதன் பின்னர் மே 29 1953ம் நாள் தனது 33ம் அகவையில் நேபாள நாட்டின் ஷெர்ப்பா இனத்தைச் சேர்ந்த மலையேறுநர் டென்சிங் நோர்கே வுடன் சேர்ந்து இவர் முதன் முதலாக எவரெஸ்ட் மலையின் உச்சியேறி வெற்றி நாட்டினார். எட்மண்ட் ஹிலாரி எவரெஸ்ட் மீது ஏறியது ஜான் ஹண்ட் என்பார் தலைமையில் பிரித்தானியரின் ஒன்பதாவது முறையாக எடுத்த முயற்சியின் பகுதியாகும்.
எட்மண்ட் ஹில்லரி | |
---|---|
![]() எட்மண்ட் ஹில்லரி | |
பிறப்பு | ஜூலை 20, 1919 (88 அகவை) துவாகௌ (Tuakau), வடக்குத் தீவு, நியூசிலாந்து |
இறப்பு | 11 சனவரி 2008(2008-01-11) (அகவை 88) ஆக்லாந்து, நியூசிலாந்து |
துணை | லூயிஸ் மேரி ரோஸ்(1953–1975), ஜூன் மல்குரூ (1989-தற்பொழுது) |
பிள்ளைகள் | பீட்டர் (1954), சாரா (1955), பெலிண்டா (1959–1975) |