கடிகாரம்
From Wikipedia, the free encyclopedia
கடிகாரம் ஒலிப்புⓘ) (வேளைப்பொறி, பொழுதுப்பொறி, மணிக்கூடு) என்பது நேரத்தை காட்டுவதற்கும், அளவிடவும், அதனை ஒருங்கிணைக்கவும் பயன்படும் ஒரு கருவியாகும். கடிகாரத்தை மணிக்கூடு என்றும் குறிப்பர். கையில் கட்டப்படும் கடிகாரத்தினை கைக்கடிகாரம் என்பர். பொதுவாக கடிகாரம் எளிதில் தூக்கி செல்லக்கூடியதாக வடிவமைக்கப்படுவதில்லை.
நாகரிக முதிர்ச்சியின் ஒரு கட்டமாக நேரத்தை அளவிடும் முறை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் பழைய மனித கண்டுபிடுப்புகளில் ஒன்றான இது பொதுவாக இயற்கையான அளவீடான ஒரு நாளினை விட குறுகிய கால அளவை அளக்க பயன்படுத்தப்படுகின்றது. பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் கடிகாரங்கள் இயற்பியல் செயல்முறைகளில் பல வளர்சியினை கண்டுள்ளது.