![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/24/Kutch_in_Gujarat_%2528India%2529.svg/langta-640px-Kutch_in_Gujarat_%2528India%2529.svg.png&w=640&q=50)
கச்சு மாவட்டம்
குசராத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கச்சு மாவட்டம் (Kutch District, அல்லது Kachchh, குசராத்தி: કચ્છ, சிந்தி மொழி: ڪڇ) மேற்கிந்தியாவில் குசராத்து மாநிலத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையோரத்தில் கச்சு வளைகுடாவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத் தலைமையிடம் புஜ் நகரம். கச்சு மாவட்டம் 45,652 சதுர கி. மீ பரப்பளவு கொண்டது. இது இந்தியாவின் மிகப் பெரிய மாவட்டம் ஆகும்.[1] இம்மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ள புஜ் நகரம், கச்சு மாவட்டத் தலைமையிடம்.[2] கச்சு மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தொகுதிகளும், ஒரு நாடாளுமன்ற தொகுதியும் அமைந்துள்ளது.
![]() கச்சுமாவட்டத்தின் இடஅமைவு குஜராத் | |
மாநிலம் | குஜராத், இந்தியா |
---|---|
தலைமையகம் | புஜ் |
பரப்பு | 45,652 km2 (17,626 sq mi) |
மக்கட்தொகை | 2,092,371 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 33/km2 (85/sq mi) |
பாலின விகிதம் | 951 |
வட்டங்கள் | 10 |
மக்களவைத்தொகுதிகள் | கச்சு மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 6 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | 1 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
கச்சு மாவட்டத்தை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள், மழைக் காலத்தில் சதுப்பு நிலங்களாகவும், மற்ற காலங்களில் வறண்ட நிலமாக உள்ளதால் இப்பகுதி ’ராண் ஆப் கட்ச்’ என்று அழைக்கப்படுகிறது. ராண் என்னும் குஜராத்திச் சொல்லுக்கு, பாலை வனம் என அர்த்தம். குஜராத்தில் உள்ள 'ராண் ஆப் கச்' உலகின் பெரிய 'உப்புப் பாலைவனம்' என்னும் சிறப்பை பெற்றுள்ளது. ஆமதாபாத்தில் இருந்து 320 கி.மீ., தொலைவில் ராண் ஆப் கட்ச் உள்ளது. உப்பு கலந்த களிமண் நிலம், மழைக்காலத்தில் இரவு நேரத்தில் பால் போல் இருக்கும். பௌர்ணமி நிலவு ஒளியின் போது விதவிதமான ஒளி வெள்ளம் தெரியும். பார்ப்பதற்கு ஓவியம் போலவே தெரியும் இந்தக் காட்சியை, 'சாத்தான்களின் ஓவியம்' என்கின்றனர். கச்சு மாவட்டம், பன்னி எனப்படும் மேய்ச்சல் நிலப் புல்வெளிகள் கொண்டிருப்பதால் கால் நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி தொழில் சிறப்பாக உள்ளது. கச்சு மாவட்டம் பெரிய ரான் ஆப் கட்ச் மற்றும் சிறு ரான் ஆப் கட்ச் பகுதிகளை கொண்டுள்ளது.
கச்சு வளைகுடாவில் அமைந்த கோரி கிரீக் கடல் எல்லைக் கோடு இந்திய-பாகிஸ்தானை பிரிக்கிறது.