கண் (உடல் உறுப்பு)
மாந்தர்களின் பார்வை உறுப்புகளில் ஒன்று. ஒளியை மின்வேதி துடிப்புகளாக நரம்பணுக்காளல் மாற்றப்ப / From Wikipedia, the free encyclopedia
கண் (ஒலிப்புⓘ) (Eye) என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும்.வெளிப்புறத்தில் உள்ள பொருள்களின் அமைப்பு, நிறம், ஒளித்தன்மை மற்றும் இயக்கம் ஆகியவற்றினை பார்வை உறுப்புத் தொகுதியின் மூலம் கண்கள் உணர்த்துகின்றன. வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட (complex) கண்கள், காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (binocular vision) காண உதவுகின்றன (மனிதர்களின் பார்வை இவ்வாறானதே); அல்லது, இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (monocular vision) காண உதவுகின்றன (பச்சோந்திகள் மற்றும் முயல்களின் பார்வை இவ்வாறானதே).
கண் | |
---|---|
முள்ளந்தண்டுளியின் கண்ணின் கட்டமைப்புப் படம் | |
கூட்டுக் கண் |