![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c5/Kingdom_of_Lagash_%252830658120300%2529.jpg/640px-Kingdom_of_Lagash_%252830658120300%2529.jpg&w=640&q=50)
கிர்சு
From Wikipedia, the free encyclopedia
கிர்சு (Girsu), தற்கால ஈராக் நாட்டின் தி கார் மாகாணத்தில் பண்டைய உபைது காலத்தில் (கிமு 5300-4800) நிறுவப்பட்ட பண்டைய நகரம் ஆகும். துவக்க வம்ச காலம் (கிமு 2900-2335) மற்றும் மூன்றாவது ஊர் வம்ச காலத்தில் (கிமு 2112-2004) பண்டைய கிர்சு நகரம் சிறப்புற்று விளங்கியது. லகாசு இராச்சியத்தை ஆண்ட மன்னர் குடியா ஆட்சிக் காலத்தில் (கிமு 2144-2124) கிர்சு நகரம் தலைநகரமாக விளங்கியது. பின்னர் கிர்சு நகரம் மத மையமாக மாறியது. மூன்றாவது ஊர் வம்ச காலத்தில் கிர்சு நகரம் முக்கிய நிர்வாக மையமாக விளங்கியது. மூன்றாவது ஊர் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் கிர்சு நகரத்தின் முக்கியத்துவம் குறைந்தது.
விரைவான உண்மைகள் கிர்சு, ஈராக், மாற்றுப் பெயர் ...
கிர்சு, ஈராக் | |
---|---|
![]() கிர்சு நகரத்தின் தொல்லியல் எச்சங்கள் | |
மாற்றுப் பெயர் | தெல்லோ தொல்லியல் மேடு |
இருப்பிடம் | தி கார் மாகாணம், ஈராக் |
பகுதி | சுமேரியா |
ஆயத்தொலைகள் | 31°33′43.3″N 46°10′39.3″E |
வகை | பண்டைய நகரம் |
வரலாறு | |
காலம் | துவக்க வம்ச காலம், மூன்றாவது ஊர் வம்சம் |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 1929–1933, 2017 |
அகழாய்வாளர் | ஹென்றி டி ஜெனோய்லாக், ஆண்ட்ரே பாரட் |
மூடு