கிறிஸ்துமசு தீவு
From Wikipedia, the free encyclopedia
கிறிஸ்துமஸ் தீவு ஆட்சிப்பகுதி (Territory of Christmas Island) இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அவுஸ்திரேலியாவின் ஒரு சிறிய ஆட்சிப்பகுதியாகும். இது பேர்த் நகரிலிருந்து 2600 கி.மீ. (1600 மைல்) வடமேற்கிலும் ஜாகார்த்தா நகரிலிருந்து 500 கி.மீ. (300 மைல்) தெற்காகவும் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் சில குடியேற்றங்களில் சுமார் 1600 பேர் வரை வசிக்கின்றனர். இங்கு காணப்படும் புவியியல் இயற்கை அமைப்பு ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகும். இத்தீவிற்கே உரிய பல உயிரினங்கள் காணப்படுகின்றன[1]. கனிய அகழ்வு இத்தீவின் முக்கிய தொழிற்துறையாக விளங்கி வந்தது. இத்தீவின் மொத்த 135 சதுர கிலோமீட்டர் (52 சது மை) பரப்பில் 65% மழைக்காடுகளாகக் காணப்படுகின்றது.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
விரைவான உண்மைகள் கிறிஸ்துமஸ் தீவுகள் ஆட்சிப்பகுதி, தலைநகரம் ...
கிறிஸ்துமஸ் தீவுகள் ஆட்சிப்பகுதி | |
---|---|
கொடி | |
நாட்டுப்பண்: Advance Australia Fair அரச வணக்கம்: கோட் சேவ் த குயிண் | |
தலைநகரம் | பிளையிங் பிஷ் கோவ் ("குடியேற்றம்") |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் (நடப்பின் படி) |
அரசாங்கம் | கூட்டாட்சி யாப்பு முடியாட்சி |
• அரசி | இரண்டாம் எலிசபெத் |
• ஆத்திரேலியப் பொதுநலவாயத்தின் ஆளுநர் | குவெண்டின் பிரிசு |
• நிருவாகி | பிறையன் லேசி |
• உள்ளூராட்சித் தலைவர் | கோர்டன் தொம்சன் |
அவுஸ்திரேலியாவின் ஆட்சிப் பகுதிகள் | |
1957 | |
பரப்பு | |
• மொத்தம் | 135 km2 (52 sq mi) |
• நீர் (%) | 0 |
மக்கள் தொகை | |
• 2021 மதிப்பிடு | 361 (ஏப்ரல் 2009) (220வது) |
• அடர்த்தி | 10.39/km2 (26.9/sq mi) (n/a) |
நாணயம் | அவுஸ்திரேலிய டொலர் (AUD) |
நேர வலயம் | ஒ.அ.நே+7 |
அழைப்புக்குறி | 61 |
இணையக் குறி | .cx |
மூடு