சய் குங்
From Wikipedia, the free encyclopedia
சயி குங் அல்லது சயி குங் நகரம் (Sai Kung Town) என்பது ஹொங்கொங், புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில், சயி குங் மாவட்டத்தில் இருக்கும் இருக்கும் ஒரு அழகிய நகரமாகும். இந்த நகரம் கடலை முகப்பாகக் கொண்டுள்ளதால், இந்நகரம் சய் குங் தீபகற்பத்தில் இருப்பதாகவும் கூறுவர். இந்த நகரம் கிராமங்கள் சூழ நடுவில் கடலை முகப்பாக கொண்டுள்ளது. இவ்விடம் உல்லாசப் பயணிகளையும், சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் ஒரு இடமாகும். இதனை கடலுணவுப் பிரியர்களின் சொர்க்கம் என்றும் அழைப்பர்.