சார்லசு டார்வின்
பிரித்தானிய இயற்கையியல் அறிஞர் / From Wikipedia, the free encyclopedia
சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12, 1809 - ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இதுவரை வாழ்ந்த உயிரியலாளர்களில் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை[1] ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.[2][3] இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை.[4]
சார்லஸ் டார்வின் Charles Darwin | |
---|---|
சார்ள்ஸ் டார்வின், தனது உயிரினங்களின் தோற்றம் வெளியிட்டபோது அவரின் 45 வயதுத் தோற்றம் (1854) | |
பிறப்பு | சார்லஸ் ராபர்ட் டார்வின் Charles Robert Darwin (1809-02-12)12 பெப்ரவரி 1809 சுரூஸ்பெரி, ஐக்கிய இராச்சியம் |
இறப்பு | 19 ஏப்ரல் 1882(1882-04-19) (அகவை 73) டவுன், கென்ட், ஐக்கிய இராச்சியம் |
வாழிடம் | இங்கிலாந்து |
குடியுரிமை | பிரித்தானிய குடியுரிமை |
தேசியம் | பிரித்தானியர் |
துறை | இயற்கையாளர் |
பணியிடங்கள் | இலண்டன் நில அமைப்பியல் சமூகம் |
கல்வி கற்ற இடங்கள் | (மூன்றாம் நிலைக்கல்வி): எடின்பரோ பல்கலைக்கழகம் (மருத்துவம்) கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் (இளங்கலைமானி) |
Academic advisors | யோன் ஸ்டீவன்ஸ் அடம் செட்விக் |
அறியப்படுவது | வேட்டைநாயின் கடற்பயணம் உயிரினங்களின் தோற்றம் படிவளர்ச்சிக் கொள்கை by இயற்கைத் தேர்வு, பொது மரபுவழி |
தாக்கம் செலுத்தியோர் | அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட் யோன் ஹேர்சில் சால்ஸ் லைல் |
பின்பற்றுவோர் | யோசப் டல்டன் கூக்கர் தோமஸ் ஹென்றி ஹக்ஸ்லி யோர்ச் ரோமன்ஸ் ஏர்ன்ஸ்ட் ஹேக்கல் யோன் லப்பக் |
விருதுகள் | றோயல் விருது (1853) வூல்லஸ்டன் விருது (1859) கொப்லி விருது (1864) |
துணைவர் | எம்மா வெட்ஜ்வுட் (திருமணம் 1839) |
கையொப்பம் |
இவரே மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, 'தக்கன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது,[5][6] அதாவது தகுதியானது உயிர் வாழும் என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்.[7]