சியேரா லியோனி
From Wikipedia, the free encyclopedia
சியேரா லியோனிக் குடியரசு (Republic of Sierra Leone) என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் சியேரா லியோனி ஒரு மேற்கு ஆபிரிக்க நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே கினிவும் தெற்கே லைபீரியாவும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் அமைந்துள்ளன. சியேரா லியோனி என்ற பெயரானது போத்துக்கீசிய மொழியில் "சிங்கக் குகை" எனப் பொருள். 1700களில் இந்நாடு அடிமை வியாபாரத்தின் முக்கிய இடமாக அமைந்தது. இதன் தலைநகர் பிறீடவுண் (Freetown). சியேரா லியோனி நிறுவனமானது அமெரிக்க விடுதலைப் போரில் பிரித்தானியர்களுக்காகப் போரிட்ட அமெரிக்க-ஆபிரிக்கர்களுக்கு ஒரு தங்குமிடமாக அமைந்தது. 1808 இல் இந்தபிரதேசமானது பிரித்தானியக் குடியாட்சிக்குட்பட்டது. 1961 இல் இந்நாடு விடுதலை அடைந்தது. 1991 இலிருந்து 2002 ஆம் ஆண்டு வரை புரட்சிவாதிகளினால் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்தப் புரட்சியானது ஐக்கிய நாடுகள் மற்றும் பிரித்தானியா இராணுவத்தின் உதவியுடன் 17,000 இராணுவத்தினரதும் புரட்சிவாதிகளினதும் ஆயுதங்களையும் களைந்தனர். 2002 ஆம் ஆண்டில் இருந்து சியேரா லியோனி நாட்டு மக்கள் அமைதியை அனுபவிக்கின்றனர். இந்நாட்டு மக்களின் சராசரி ஆயுட்காலம் ஆண்களுக்கு 38 ஆண்டுகளும் பெண்களுக்கு 42 உம் ஆகும்
சியேரா லியோனிக் குடியரசு Republic of Sierra Leone | |
---|---|
குறிக்கோள்: "ஐக்கியம் - விடுதலை - நீதி" | |
நாட்டுப்பண்: High We Exalt Thee, Realm of the Free | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | பிறீடவுண் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
மக்கள் | சியேரா லியோனியன் |
அரசாங்கம் | குடியரசு |
ஏனஸ் பாய் கொரோமா (Ernest Bai Koroma | |
குடியரசு | |
• ஐக்கிய இராச்சியத்தில் இருந்து. | ஏப்ரல் 27, 1961 |
பரப்பு | |
• மொத்தம் | 71,740 km2 (27,700 sq mi) (119வது) |
• நீர் (%) | 1.0 |
மக்கள் தொகை | |
• ஜூலை 2007 மதிப்பிடு | 6,144,562 (103வது) |
5,426,618 | |
• அடர்த்தி | 83/km2 (215.0/sq mi) (114வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $4.921 billion (151வது) |
• தலைவிகிதம் | $903 (172வது) |
மமேசு (2004) | 0.335 Error: Invalid HDI value · 176வது |
நாணயம் | லியோனி (SLL) |
நேர வலயம் | ஒ.அ.நே+0 (GMT) |
அழைப்புக்குறி | 232 |
இணையக் குறி | .sl |
1 2007 தரவுகளின் படி |