விரைவான உண்மைகள் IATA, ICAO ...
SriLankan Airlines
ශ්‍රී ලංකන් ගුවන් සේවය
இலங்கை விமான சேவை
IATA ICAO அழைப்புக் குறியீடு
UL ALK SRILANKAN
நிறுவல்ஏர் சிலோன்
செயற்பாடு துவக்கம்1 செப்டம்பர் 1979 (1979-09-01)
மையங்கள்பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம்
அடிக்கடி பறப்பவர் திட்டம்பிளை ஸ்மைல்
கூட்டணிஒன் வேர்ல்ட்
கிளை நிறுவனங்கள்
ஸ்ரீலங்கன் கார்கோ
 ஸ்ரீலங்கன் கேட்டரிங்க்
 ஸ்ரீலங்கன் இஞ்சினியரிங்க்                                                                                                                                                ஸ்ரீலங்கன் க்ரவுண்ட் ஹான்ட்லிங்க்
 ஸ்ரீலங்கன் ஹாலிடேய்ஸ்
 ஸ்ரீலங்கன் ஐடி சிஸ்டம்ஸ்
வானூர்தி எண்ணிக்கை20[1]
சேரிடங்கள்42[2]
தலைமையிடம்லெவல் 3,
கிழக்கு டவர் ,
உலக வர்த்தக மையம் ,
எசலோன் சதுர்க்கம் ,
கொழும்பு 01,
இலங்கை[3]
முக்கிய நபர்கள்அஜித் என் . டயஸ் (Chairman)
கப்டன் சுரேன் ரத்தவத்தே (CEO)
வலைத்தளம்www.srilankan.com (Sinhalese, Tamil, English)[4]
மூடு

வரலாறு

இலங்கை வான்வழி (சிறீலங்கன் எயர்லைன்ஸ்) இலங்கையின் தேசிய விமானசேவை நிறுவனமாகும். முன்னர் எயர் லங்கா என அறியப்பட்ட இந்நிறுவனம் ஆசிய, ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பறப்புக்களை மேற்கொள்கிறது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைத் தளமாகக் கொண்டும் இந்நிறுவனம் 14 விமானங்களைக் கொண்டதாகும். இந்நிறுவனத்தின் 43.6% பங்கு எமிரேற்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். இது ஐஓஎஸ்ஏ சான்றிதழ் பெற்ற நிறுவனம் ஆகும். கொழும்பு மற்றும் மட்டாலாவினை மையங்களாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம் தெற்காசியா, மத்திய கிழக்கு ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா ஆகிய இடங்களில் வலிமையான சந்தைப் பங்குபெறுதலைக் கொண்டுள்ளது. ஒன்வேர்ல்டு குளோபல் ஏர்லைன் அல்லையன்ஸின் உறுப்பினராக 2014 ல் பங்குபெற்றது.

ஏர் லங்கா என்று ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சேவை 1978 ல் தொடக்கப்பட்டது. தெற்காசியாவின் பெரிய சர்வதேச விமானச்சேவைகளில் இதுவும் ஒன்று. இதன் விமானச்சேவைகளின் பாதுகாப்பு மதிப்பு 7/7 என்ற அளவில் உள்ளது.[5]

இலக்குகள்

Thumb
Air Lanka Lockheed TriStar 500 at Frankfurt Airport in 1992

ஜூன் 2014 ன் படி, இலங்கையின் இந்த விமானச்சேவை 39 நாடுகளில்,[6] 89 இலக்குகளை நோக்கி இயங்குகிறது. இதில் கோட்ஷேர்களும் அடங்கும். மேல் மற்றும் கொழும்பிற்கு இடையில் வாரந்தோறும் 30 விமானங்கள் அனுப்பப்படுகின்றன.

மையங்கள் மற்றும் கவனிக்கப்படும் நகரங்கள்

மையங்கள்

அனைத்து விமானச்சேவைகளின் இலக்குகளுக்கான பண்டாரநாயக் சர்வதேச விமான நிலையம் ஒரு பெரிய மையமாகத் திகழ்கிறது. ஸ்ரீலங்கன் விமானச்சேவையுடன், மிஹின் லங்கா, லங்கன் கார்கோ, எக்ஸ்போ ஏர் மற்றும் சின்னமோன் ஏர் போன்ற நிறுவனங்களும் இந்த விமான நிலையத்தினை மையமாகக் கொண்டுள்ளன. பேங்காக், பெய்ஜிங்க், மேல், ரியாத் மற்றும் ஷாங்காய் விமானங்களுக்கு மட்டாலா ராஜபக்சே சர்வதேச விமான நிலையம் நிறுத்தமாக உள்ளது.

கவனிக்கப்படும் நகரங்கள்

  1. ஸ்ரீலங்கன் ஏர்டாக்ஸியின் மையம் கொழும்பில் உள்ளது மற்றும் இலங்கையின் 15 இலக்குகளை நோக்கி விமானம் இயக்கப்படுகிறது.
  2. சுவர்னபூமி விமான நிலையம் (பேங்காக்)

கோட்ஷேர் ஒப்பந்தங்கள்

இலங்கையின் இந்த விமானச்சேவை பின்வரும் நிறுவனங்களுடன் கோட்ஷேர் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.

  1. ஏர் கனடா [7]
  2. ஏர் இந்தியா
  3. அலிடாலியா
  4. சின்னமோன் ஏர்
  5. எடிஹாட் ஏர்வேய்ஸ்[8][9]
  6. ஃபின்னையர்[10]
  7. மலேசியா ஏர்லைன்ஸ் [11]
  8. மிஹின் லங்கா
  9. ஓமன் ஏர்
  10. குவான்டாஸ்
  11. ராயல் ஜோர்டானியன்
  12. எஸ்7 ஏர்லைன்ஸ்[12]
  13. சவுதியா

முக்கியப் பகுதிகள்

பின்வரும் இடங்களை முக்கியப் பகுதிகளாகக் கொண்டு ஸ்ரீலங்கன் விமானச்சேவை செயல்படுகிறது.[13]

  1. லண்டன் முதல் டொரன்டோ வரை (வாரத்திற்கு 28 விமானங்கள்)
  2. டொரன்டோ முதல் லண்டன் வரை (வாரத்திற்கு 28 விமானங்கள்)
  3. மேல் முதல் கொழும்பு வரை (வாரத்திற்கு 25 விமானங்கள்)
  4. அபுதாபி முதல் கொழும்பு வரை (வாரத்திற்கு 21 விமானங்கள்)

தற்போதைய விமானக் குழுமங்கள்:

மே 2014 ன் படி, சராசரியாக 10.8 வயதுடன் உள்ள 22 விமானங்கள் இலங்கையின் இந்த விமானச்சேவையில் உள்ளது.[14][15][16]

விருதுகள் மற்றும் சாதனைகள்

  1. ஏர்லைன் ஆஃப் த இயர் 2008 மற்றும் 2009 – ஸ்ரீலங்கன் ப்ரெஸிடென்ஷியல் அண்ட் டூரிஸம் அவார்ட்ஸ்
  2. ஏர்லைன் ஆஃப் த இ தயர் 2010 (மூன்றாம் ஆண்டு)
  3. மத்திய ஆசியாவின் சிறந்த விமான சேவை (தொடர்ந்து மூன்றாண்டுகள்) – டிராவல் டிரேட் கெசட்
  4. தெற்காசியாவின் சிறந்த விமானச்சேவை (தொடர்ந்து நான்கு முறை) – ஸ்கைடிராக்ஸ்
  5. உள் விமான பொழுதுபோக்குகளுக்கான சிறந்த சேவை (சிறிய குழுமங்களுக்கு) இருறை – வேர்ல்டு என்டர்டெய்ன்மென்ட் அசோஸியேஷன்
  6. பெஸ்ட் டர்ன் அரவுண்ட் ஆஃப் த இயர் 2004 – சென்டர் ஃபார் ஏசிய பசிபிக் ஏவியேஷன்
  7. பெஸ்ட் பிரிண்ட் மீடியா ப்ரெசென்டேஷன் இன் டிராவல் & டூரிஸம்
  8. பெஸ்ட் ரீஜியன் ஏபெக்ஷ் அவார்ட்
  9. டெஸ்டினேஷன் லோயல் பார்ட்னர் / டூர் ஆபரேட்டர் அவார்ட் ஃபார் ஸ்ரீலங்கன் ஹாலிடேய்ஸ்
  10. ஃஃபர்ஸ்ட் ரன்னர் அப் ஃபார் வேர்ட்ல்ஸ் பெஸ்ட் கேபின் ஸ்டாஃப் – ஸ்கைடிராக்ஸ்
  11. ஃபாரின் கேரியர் ஆஃப் த இயர் (தெற்காசியப் பகுதி) – கோலாலம்பூர் சர்வதேச விமான நிலைய விருதுகள்
  12. பெஸ்ட் ஈஸ்ட்பவுண்ட் இன்டர்னேஷனர் ஏர்லைன் - கலிலியோ இன்டியன் எக்ஸ்பிரஸ் விருது
  13. தொடர்ந்து மூன்று முறை பெஸ்ட் ஏர்லைன் ஆஃப் த இயர் விருது வாங்கியதற்காக - ஹால் ஆஃப் ஃபேம் விருது
  14. KLIA விருது
  15. பெஸ்ட் ஏர்லைன் மார்கெட்டிங்க் கம்பைன் – PATA தங்க விருது 2007
  16. பெஸ்ட் ஏசியன் ஏர்லைன் சர்வே - ரன்னர் அப் லண்டனின் டெய்லி டெலெக்ராப்பால் நடத்தப்பட்டது.
  17. HRM சில்வர் விருது - 2012
  18. வேர்ல்ட்ஸ் பெஸ்ட் ஏர்லைன் இன் சர்வே ஆஃப் எகனாமி கிளாஸ் பேசஞ்சர்ஸ்
  19. வேர்ல்ட்ஸ் ஃபிரண்டலியஸ்ட் கேபின் ஸ்டாஃப் – ஸ்கைடிராக்ஸ்
  20. வேர்ல்ட்ஸ் மோஸ்ட் ரெலியபிள் ஆபரேட்டர் ஆஃப் ஏர்பஸ் ஏ330 (சிறிய குழுமங்கள்) – ஏர்பஸ் நிறுவனங்கள்
  21. வேர்ல்ட்ஸ் மோஸ்ட் ரெலியபிள் ஆபரேட்டர் ஆஃப் ஏர்பஸ் ஏ340 (சிறிய குழுமங்கள்) – ஏர்பஸ் நிறுவனங்கள்
  22. வேர்ல்ட் கிளாஸ் ஸ்டாண்டர்ட் – ஸ்ரீலங்கன் ஏர்லைன் ஐடி சிஸ்டம்ஸ்

தொகுப்பு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.