சிலிம் ரிவர்
சிலிம் ரிவர் (Slim River) நகரம், மலேசியா, பேராக் மாநிலத்தில், முவாலிம் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நக / From Wikipedia, the free encyclopedia
சிலிம் ரிவர் (Slim River) நகரம், மலேசியா, பேராக் மாநிலத்தில், முவாலிம் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். ஈப்போ, கோலாலம்பூர் மாநகரங்களை இணைக்கும், மலேசியாவின் வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியில் இந்த நகரம் அமைந்து உள்ளது. ஈப்போ மாநகரத்தில் இருந்து 105 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து 100 கி.மீ.; தொலைவில் சிலிம் ரிவர் நகரம் அமைந்து உள்ளது.
விரைவான உண்மைகள் சிலிம் ரிவர்Slim River பேராக், நாடு ...
ஆள்கூறுகள்: 3°49′51″N 101°24′14″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
உருவாக்கம் | 1800 |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | ஏறக்குறைய 1,00,000 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | https://ptg.perak.gov.my/portal/web/muallim |
மூடு
இந்த நகரத்திற்கு அருகில் ஒரு நதி ஓடுகிறது. அதற்கு சுங்கை சிலிம் என்று பெயர். சுங்கை என்ற சொல்லுக்கு மலாய் மொழியில் நதி என்று பொருள். இந்த நதிக்கு உண்மையில் 19-ஆம் நூற்றாண்டில் ஓர் ஆங்கில இராணுவ அதிகாரி வில்லியம் சிலிம் (William Slim) என்பவரின் பெயர் சூட்டப்பட்டது.