சுவா (பிஜி)
பிஜி நாட்டின் தலை நகரம் / From Wikipedia, the free encyclopedia
சுவா (ஆங்கில மொழி: Suva) பிஜி நாட்டின் தலைநகரமும் நசினுவிற்குப்பிறகு அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இது விட்டி லெவு தீவின் தென்கிழக்குக் கரையில் அமைந்துள்ளது.
சுவா
सुवा பிஜியின் தலைநகரம் | |
---|---|
குறிக்கோளுரை: Valataka na Dina (Fight for the Right) | |
பிஜியின் நகரம் சுவா | |
நாடு | பிஜி |
தீவு | விடி லிவு |
Division | மத்திய பிரிவு பிஜி |
அரசு | |
• வகை | சுவா நகர சபை |
பரப்பளவு | |
• நகரம் | 2,048 km2 (790.5 sq mi) |
மக்கள்தொகை (2009) | |
• நகரம் | 88,271 |
• அடர்த்தி | 43/km2 (110/sq mi) |
• நகர்ப்புறம் | 1,75,399 |
நேர வலயம் | ஒசநே+12 (1200 GMT) |
இணையதளம் | www |
2007 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சுவாவின் மக்கள்தொகை 85,691.[1] சுவாவின் புறநகர்ப்பகுதிகளை உள்ளிட்ட சுவா பெருநகர்ப் பகுதி, லாமி, நசினு மற்றும் நவுசோரி ஆகிய பகுதிகளின் மொத்த மக்கள்தொகை 330,000. இது பிஜி நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்காகும். லாமியை விடுத்து இந்தப்பெருநகர் வளாகம் சுவா-நவுசோரி நடைக்கூடம் எனப்படுகின்றது.
1877 ஆம் ஆண்டில் லோமாவிட்டி மாகாணத்தின் லெவுகாவில் இருந்து சுவாவை பிஜியின் தலைநகராக மாற்ற முடிவு செய்யப்பட்டது. காலனியின் நிர்வாகம் 1882 இல் லெவுகாவிலிருந்து சுவாவிற்கு மாற்றப்பட்டது. 2007 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுவா நகரத்தின் மொத்த மக்கள தொகை 85,691 ஆகும்.[2] 2007 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுயாதீன புறநகர்ப் பகுதிகள் உட்பட, கிரேட்டர் சுவா நகர்ப்புறத்தின் மக்கள் தொகை 172,399 ஆகும்.[2] சுவாவின் எல்லை நகரங்களான லாமி, நாசினு மற்றும் நவ்சோரி ஆகியவற்றுடன் மொத்த நகர்ப்புற மக்கள் தொகை 330,000 ஆகும். இது நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. பிஜியின் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார மையமாக சுவா திகழ்கின்றது. இந்நகரம் தென் பசிபிக் பொருளாதார மற்றும் கலாச்சார தலைநகராகவும் உள்ளது.