ஐரோப்பிய இடலை
தாவர இனம் / From Wikipedia, the free encyclopedia
ஐரோப்பிய இடலை அல்லது ஆலிவ் மரம் (Olea europea) என்பது நடுநிலக் கடல் வடிபகுதியில் காணப்படும் சிறு மர வகையாகும். இது இடலை என்ற பேரினத்தின் மாதிரி இனம் ஆகும். இதன் உயரம் 8–15 மீட்டர் அளவு வளரும். இதன் இலைகள் 4–10 செ.மீ. நீளமும் 1–3 செ.மீ. அகலமும் இருக்கும். இதன் பட்டை முறுங்கி வளரும். இவற்றின் பழங்கள் சற்றுத் துவர்ப்பானவை.
ஐரோப்பிய இடலை | |
---|---|
ஐரோப்பிய இடலை மரம், சாக்கடல், யோர்தான் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids |
வரிசை: | Lamiales |
குடும்பம்: | Oleaceae |
பேரினம்: | |
இருசொற் பெயரீடு | |
Olea europaea லி | |
ஐரோப்பிய இடலைப் பழம் 1–2.5 cm நீளமும், தட்டையான சதை கொண்டுள்ளது. அது பிஞ்சு நிலையில் பச்சை நிறமும் பழுத்த நிலையில் கருப்பாக இருக்கும். இது உலகில் பரவலாகப் பயிரிடப்படும் பழங்களில் ஒன்றாகும். இதன்மூலம் இடலை எண்ணெய் தயாரிக்கப்படுகின்றது.[1] இந்த எண்ணை சமையலுக்கும் விளக்கு எரிக்கவும் பயன்படுகின்றது. ஆலிவ் எண்ணெயை சமயச்சடங்குகளின்போதும் பிற சமயங்களிலும் உடலில் தேய்த்துக் கொள்வதும் உண்டு. ஆலிவ் கனிகள், எண்ணெய் ஆகியன மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. வாசனைப் பொருட்கள் சவர்க்காரம் செய்யவும் உணவுப் பொருள்களைப் பாதுகாக்கவும் கம்பளியைப் பதப்படுத்தவும் ஆலிவ் எண்ணெய் பயன்படுகிறது. ஆலிவ் காய்கள் ஊறுகாய் போடவும் தின்பண்டங்கள் செய்யவும் பயன்படுகின்றன.