ஜார்ஜ் பெர்னாட் ஷா
ஐரிய நாடக ஆசிரியர், விமர்சகர் / From Wikipedia, the free encyclopedia
ஜார்ஜ் பெர்னார்ட் ஷா (George Bernard Shaw சூலை 26,1856 - நவம்பர் 21950), இவரது சுய வற்புறுத்தலின் பேரில் பெர்னார்ட் ஷா என்று அழைக்கப்படுகிறார். இவர் ஒரு ஐரிய நாடக ஆசிரியர், விமர்சகர், மதக் கோட்பாடுகளுக்கு எதிரானவர் மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார். இவரது தாக்கம் மேற்கத்திய நாடகம், கலாச்சாரம் மற்றும் அரசியலில் 1880ஆம் ஆண்டில் இருந்து தற்போதுவரை நீடிக்கிறது. மேன் அண்ட் சூப்பர்மேன் (1902), பிக்மேலியன் (1913) மற்றும் செயிண்ட் ஜோன் (1923) போன்ற பரவலாக அறியப்பட்ட படைப்புகள் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார். சமகால நிகழ்வுகளை நையாண்டி செய்யும் விதம் மற்றும் வரலாற்று கருத்துருவகம் செய்தல் ஆகியவற்றில் அவரது காலத்தில் சிறந்து விளங்கினார். 1925இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.
விரைவான உண்மைகள் ஜார்ஜ் பெர்னாட் ஷா, பிறப்பு ...
மூடு