தன்யூபு ஆறு
ஆறு / From Wikipedia, the free encyclopedia
தான்யூபு (Danube) (/ˈdænjuːb/ DAN-ewb, மற்ற மொழிகளில் பல்வேறு பெயர்களில்) அழைக்கப்படுகிறது. இது ஐரோப்பாவின் இரண்டாவது நீளமான ஆறு ஆகும். வோல்கா இதைவிட பெரிய ஐரோப்பிய ஆறாகும். இது நடுவண், கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இது ஜெர்மனியில் உள்ள கருங்காட்டில் இருந்து, பிரிகாக் (Brigach), பிரேகு (Breg) என்னும் இரண்டு சிறு ஆறுகளாகத் தோற்றம் பெறுகின்றது. இவை இரண்டும் இணையும் இடத்திலிருந்தே தான்யூபு ஆறு எனப் பெயர் பெறுகின்றது. இந்த ஆறு, கிழக்கு முகமாக 2850 கிமீ (1771 மைல்கள்) ஓடிப் பல கிழக்கு ஐரோப்பியத் தலைநகரங்கள் ஊடாகப் பாய்ந்து இறுதியில், உருமேனியா, உக்கிரைன் ஆகிய நாடுகளிலுள்ள தான்யூபு கழிமுகத்தினூடாகக் கருங்கடலில் கலக்கிறது.
தான்யூபு ஆறு | |
River | |
நாடுகள் | செருமனி, ஆசுத்திரியா, சுலோவாகியா, அங்கேரி, குரோழ்சியா, செர்பியா, பல்கேரியா, உரொமேனியா, மால்டோவா, உக்கிரைன் |
---|---|
நகரங்கள் | உல்ம், இங்கோசுதாது, உரோகன்பர்கு, லிஞ்சு, வியன்னா, பிராதிசுலாவா, கியோர், புதாபெசுட்டு, துனவூய்வாரோசு, வுகோவர், நோவிசாது, சேமுன், பெல்கிரேடு, பான்செவோ, சுமேதெரவோ, துரோபேட்டா துர்னு-செவெரின் |
Primary source | பிரேகு |
- அமைவிடம் | மர்திசுகபெல்லே, கருங்காடு, செருமனி |
- உயர்வு | 1,078 மீ (3,537 அடி) |
- நீளம் | |
Secondary source | பிரிகாக் |
- location | புனித கியார்கன், கருங்காடு, செருமனி |
- உயர்வு | 940 மீ (3,084 அடி) |
- நீளம் | |
Source confluence | |
- location | தோனவுஎசுசிங்கன் |
கழிமுகம் | தான்யூபுக் கழிமுகம் |
நீளம் | 2,860 கிமீ (1,777 மைல்) |
Depth | 1−8 மீ (−25 அடி) |
வடிநிலம் | 8,17,000 கிமீ² (3,15,445 ச.மைல்) |
Discharge | for தான்யூபுக் கழிமுகம்முன்பு |
- சராசரி | |
Discharge elsewhere (average) | |
- பாசவு | 30கிமீ, நகருக்கு முன்பு |
- வியன்னா | |
- புதாபெசுட்டு | |
- பெல்கிரேடு | |
தான்யூபு ஆற்றுத்தடம் சிவப்பில் உள்ளது
|
தற்போது உள்ளது போலவே தான்யூபு ஆறு பல நூற்றாண்டுகளாக ஓர் முதன்மை வாய்ந்த அனைத்துலக நீர்வழியாக இருந்து வருகிறது. வரலாற்றில், உரோமப் பேரரசின் நீண்ட கால எல்லையாக இருந்துவந்த இது, இன்று பத்து நாடுகளின் ஊடாகப் பாய்ந்து செல்கிறது அல்லது, அவ்வெல்லைகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இந்நாடுகள், செருமனி, ஆசுத்திரியா, சுலோவாக்கியா, அங்கேரி, குரோழ்சியா, செர்பியா, பல்கேரியா, உருமேனியா, மால்டோவா, உக்கிரைன் என்பவையாகும். இவற்றுடன், இதன் வடிநிலம் இத்தாலி, போலந்து, சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, சுலோவேனியா, பொசுனியாவும் எர்சகோவினாவும், மாந்தெனேகுரோ, மாசிடோனியக் குடியரசு, அல்பேனியா ஆகிய மேலும் பல நாடுகளின் பகுதிகளாக அமைந்துள்ளது.தான்யூபு ஆற்றுப் படுகை ஐரோப்பாவில் உயிர்ப்பன்மைக்குப் பெயர்பெற்றது. இது ஈட்டிமீன், சாந்தர், உச்சன், கெளுத்தி, விலாங்குவகை சார்ந்த நன்னீர் மீன்கள் போன்ற நூற்றுக்கணக்கான மீன் இனங்களுக்கு வாழிடமாக அமைந்துள்ளது. இது கெண்டை, சுறா, சாலமன், திருக்கை ஆகிய மீன்களின் வாழிடமும் ஆகும். தான்யூபு கழிமுகத்திலும் ஆற்றின் கீழ்ப்பகுதியிலும் முழு உவர்மீன்களும் வாழ்கின்றன. இவற்றுள் ஐரோப்பிய விலாங்கு, மடவை கொடுவாய்மீன் ஆகியவை உள்ளடங்கும்.