திராவிட மொழிக் குடும்பம்
தென்னிந்தியாவில் முதன்மையாகப் பேசப்படும் மொழிக்குடும்பம் / From Wikipedia, the free encyclopedia
திராவிட மொழிகள் (Dravidian languages) பெரும்பாலும் தென்னாசியாவில் பேசப்படும் 86 மொழிகளை உள்ளடக்கிய ஒரு மொழிக் குடும்பமாகும்.[1] இம்மொழிகளை 215 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேசுகின்றனர்.[2] இவை தெற்கு, தென்-மத்தி, மத்தி, வடக்கு என நான்கு குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. இவற்றில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியன இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்நான்கு மொழிகளும் முறையே தமிழ் நாடு, ஆந்திரப் பிரதேசம், கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் அலுவல் மொழிகளாகத் திகழ்கின்றன.
திராவிடம் | ||
---|---|---|
புவியியல் பரம்பல்: |
தெற்காசியா, அதிகமாக தென் இந்தியா | |
மொழி வகைப்பாடு: | உலகிலுள்ள பெரிய மொழிக் குடும்பங்களில் ஒன்று | |
முதனிலை-மொழி: | முதனிலைத் திராவிட மொழி | |
துணைப்பிரிவு: |
வடக்கு
மத்தி
தெற்கு
| |
எத்னாலாக் குறி: | 17-1265 | |
ISO 639-2 and 639-5: | dra | |
Distribution of subgroups of Dravidian languages:
|
தென்னிந்திய மொழிகள்பற்றி ஆராய்ந்து, 'திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஓர் ஒப்பிலக்கணம்' என்ற நூலை 1856-இல் எழுதிய இராபர்ட்டு கால்டுவெல், இந்த நான்கு மொழிகளுடன், தென்னிந்தியாவிலிருந்த வேறு சில மொழிகளையும் சேர்த்து, அவற்றைச் சுட்டுவதற்காகத் 'திராவிட' என்ற சொல்லை உருவாக்கினார்.[3] பின்னர் வந்த ஆய்வாளர்கள், திராவிட மொழிகளைச் சேர்ந்த மேலும் சில மொழிகள், மத்திய இந்தியா, வட இந்தியா, பாகித்தானிலுள்ள பலூச்சித்தான், நேபாளம் ஆகிய இடங்களில் வழங்கி வருவதை எடுத்துக்காட்டினர்.