தில்லியில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
தெற்கு தில்லி மாவட்டம் (South Delhi) வட இந்தியாவின், தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் சாகேத் நகரம் ஆகும்.
தெற்கு தில்லி | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
அரசு | |
• நிர்வாகம் | GNCT of Delhi |
பரப்பளவு | |
• மொத்தம் | 247 km2 (95 sq mi) |
ஏற்றம் | 241 m (791 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 27,31,929 |
• அடர்த்தி | 11,000/km2 (29,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அருகமைந்த நகரம் | பரிதாபாத் |
மக்களவைத் தொகுதி | தெற்கு தில்லி |
உள்ளாட்சி அமைப்பு | தெற்கு தில்லி மாநகராட்சி |
ஒன்பது மாவட்டங்களாக இருந்த தில்லி மாநிலத்தில், 11 செப்டம்பர் 2012 அன்று சதாரா மாவட்டம் மற்றும் தென்கிழக்கு தில்லி மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் துவக்கப்பட்டது. [1] [2]
தெற்கு தில்லி மாவட்டத்தின் கிழக்கில் யமுனை ஆறு, வடக்கில் புதுதில்லி, தென்கிழக்கில் அரியானாவின் பரிதாபாத் மாவட்டம், தென்மேற்கில் அரியானாவின் குர்கான் மாவட்டம், மேற்கில் தென்மேற்கு தில்லி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
தெற்கு தில்லி மாவட்டம் சாகேத், ஹவுஸ்காஸ் மற்றும் மெஹ்ரௌலி என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டது.[3]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,731,929 ஆக உள்ளது. நகரத்தில் 99.55% மக்களும்; கிராமங்களில் 0.45% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 20.51% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,467,428 ஆண்களும்; 1,264,501 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 862 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 247 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 11,060 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 86.57 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.73 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 80.55 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 331,043 ஆக உள்ளது. [4]
இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 2,155,759 (78.91 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 445,914 (16.32 %) ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 69,520 (2.54 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை () ஆகவும்; கிறித்தவ மக்கள் தொகை 41,880 (1.53 %) ஆகவும்; பௌத்த சமய மக்கள் தொகை 3,862 (0.14 %) ஆகவும் உள்ளது.
தேசிய தலைநகர் வலயத்தின் ஆட்சி மொழிகளான இந்தி மற்றும் ஆங்கிலத்துடன், பஞ்சாபி, உருது, தமிழ் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான மாநில மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.