தேனீ
From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை தேனீ எனும் பூச்சி இனம் பற்றிய தகவல்களைக் கொண்டது. தேனி எனும் பெயரில் உள்ள ஊர் பற்றிய தகவலுக்குத் தேனி கட்டுரையைப் பார்க்க வேண்டும்.
தேனீக்கள் ஆறுகால்கள் (Hexapoda) கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்துத் தேனடையில் தேனாகச் சேகரித்து வைக்கின்றன.
விரைவான உண்மைகள் தேனீ Honey bees, உயிரியல் வகைப்பாடு ...
தேனீ Honey bees | |
---|---|
மேற்குலகத் தேனீ பூவில் இருந்து பூந்தேன் உறிஞ்சுகின்றது | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | Pterygota |
உள்வகுப்பு: | Neoptera |
பெருவரிசை: | Endopterygota |
வரிசை: | Hymenoptera |
துணைவரிசை: | Apocrita |
குடும்பம்: | Apidae |
துணைக்குடும்பம்: | Apinae |
சிற்றினம்: | Apini |
பேரினம்: | Apis L., 1758 |
இனம் | |
Apis andreniformis
Apis dorsata, or giant honey bee
Apis cerana, or eastern honey bee |
மூடு
இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்தத் தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே (Apidae) என்னும் குடும்பத்தில், ஏப்பிஸ் (Apis) என்னும் பேரினத்தைச் சேர்ந்தவை.