பழைய கோவா
From Wikipedia, the free encyclopedia
பழைய கோவா (Old Goa, கொங்கணி:पोरणें गोंय – Pornnem Goem) அல்லது வெல்கா கோவா (வெல்கா போர்த்துக்கீசிய மொழியில் பழைய என்ற பொருளுடையது) இந்திய மாநிலம் கோவாவின் வடக்கு கோவா மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமாகும். இந்த நகரத்தை 15ஆம் நூற்றாண்டில் பீஜப்பூர் சுல்தான்கள் கட்டினர்; 16ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டில் பிளேக் நோய்த்தொற்றால் புறக்கணிக்கப்படும்வரை இது போர்த்துகேய இந்தியாவின் தலைநகரமாக விளங்கியது. பிளேக் நோய் பரவுவதற்கு முன்னர் இங்கு 200,000 பேர் வாழ்ந்திருந்ததாக கருதப்படுகிறது. இந்த நகரத்தின் எச்சங்கள் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளன. பழைய கோவா தற்போதைய தலைநகரம் பனாஜியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தக் கட்டுரை யுனெசுகோவின் உலகப் பாரம்பரியக் களம் பற்றியது. வடக்கு கோவாவிலுள்ள நகரத்திற்கு, கோவா வெல்கா என்பதைப் பாருங்கள்.
விரைவான உண்மைகள் கோவாவின் தேவாலயங்களும் மடங்களும், வகை ...
கோவாவின் தேவாலயங்களும் மடங்களும் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
சான்டா கேதரீனா செ தேவாலயம் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | ii, iv, vi |
உசாத்துணை | 234 |
UNESCO region | ஆசியா-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1986 (10வது தொடர்) |
மூடு