பாஸ்ரா மாகாணம்
ஈராக் மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
பாஸ்ரா கவர்னரேட் ( அரபு மொழி: محافظة البصرة Muḥāfaẓa al-Baṣra (அல்லது பாஸ்ரா மாகாணம்) என்பது தெற்கு ஈராக்கில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் எல்லைகளாக தெற்கில் குவைத்தும் கிழக்கில் ஈரானும் உள்ளன. இந்த மாகாணத்தின் தலைநகராக பசுரா அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் மாவட்டங்களாக பசுரா மாவட்டம், அல்-குர்னா மாவட்டம், அல்-ஜுபைர் மாவட்டம், அல்-மிதினா மாவட்டம், ஷட் அல்-அரபு மாவட்டம், அபு அல்-காசீப் மாவட்டம் மற்றும் பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள அல்-ஃபா மாவட்டம் போன்றவை ஆகும்.