மலாயா ஒன்றியம்
தீபகற்ப மலேசியாவின் மாநிலங்களும் நீரிணை குடியேற்ற மாநிலங்களும் ஒன்றாக இணைக்கப்பட்ட ஓர் ஒன்ற / From Wikipedia, the free encyclopedia
மலாயா ஒன்றியம் அல்லது மலாயன் யூனியன் (ஆங்கிலம்: Malayan Union; மலாய் மொழி: Malayan Union; சீனம்: 马来亚联盟; ஜாவி: ملايان يونيان) என்பது 1946-ஆம் ஆண்டில், தீபகற்ப மலேசியாவின் மாநிலங்களும் (Malay States); மற்றும் நீரிணை குடியேற்ற மாநிலங்களும் (Straits Settlements) ஒன்றாக இணைக்கப்பட்ட ஓர் ஒன்றியமாகும்.
விரைவான உண்மைகள் மலாயா ஒன்றியம்Malayan Union, நிலை ...
மலாயா ஒன்றியம் Malayan Union | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1946–1948 | |||||||||
நிலை | காலனி | ||||||||
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | கோலாலம்பூர் 3°8′N 101°41′E | ||||||||
பேசப்படும் மொழிகள் | மலாய் ஆங்கிலம் | ||||||||
சமயம் | இசுலாம் பௌத்தம் இந்து சீர்திருத்தத் திருச்சபை புராணச் சமயம் ஆவியுலக நம்பிக்கை | ||||||||
மன்னர் | |||||||||
• 1946–1948 | ஆறாம் ஜோர்ஜ் | ||||||||
ஆளுநர் | |||||||||
• 1946-1948 | எட்வர்ட் ஜென்ட் (Edward Gent) | ||||||||
வரலாற்று சகாப்தம் | மறுகாலனி ஆக்கம் (Decolonisation) | ||||||||
• தொடக்கம் | 1 ஏப்ரல் 1946 | ||||||||
• முடிவு | 31 சனவரி 1948 | ||||||||
நாணயம் | மலாயா டாலர் (Malayan dollar) | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | மலேசியா | ||||||||
1. FMS consisted of Selangor, Perak, Negeri Sembilan and Pahang. 2. Singapore taken out of the Straits Settlements and made a Crown Colony of its own. |
மூடு
பிரித்தானிய மலாயாவில் (British Malaya); பிரித்தானிய நிர்வாகத்தை எளிமைப்படுத்த, ஒரே அரசாங்கத்தின் கீழ், தீபகற்ப மலேசியா மாநிலங்கள் ஒன்றிணைக்கப் பட்டன. அந்த ஒன்றிணைப்பை மலாயா ஒன்றியம் என்று அழைத்தார்கள்.
இந்த மலாயா ஒன்றியம் உருவாக்கத்திற்கு மலாய் இன மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, ஈராண்டுகள் கழித்து, 1948-இல், மலாயா ஒன்றியம் என்பது மலாயா கூட்டமைப்பு (Federation of Malaya) என மறுச் சீரமைப்பு செய்யப்பட்டது.