மலேசிய அரசி
மலேசிய பேரரசரின் துணைவியார் / From Wikipedia, the free encyclopedia
மலேசிய அரசி (ஆங்கிலம்: Queen of Malaysia; மலாய்: Raja Permaisuri Agong; ஜாவி: راج ڤرمايسوري اݢوڠ) என்பவர் மலேசிய அரசியலமைப்பின் கீழ் மலேசிய மாமன்னராகப் பொறுப்பு வகிக்கும் மாட்சிமிகு மலேசிய பேரரசரின் துணைவியார் ஆவார்.
விரைவான உண்மைகள் மாட்சிமிகு பேரரசி Queen of Malaysia Raja Permaisuri Agong, வாழுமிடம் ...
மாட்சிமிகு பேரரசி Queen of Malaysia Raja Permaisuri Agong | |
---|---|
மலேசிய அரசியாரின் சின்னம் | |
வாழுமிடம் | |
உருவாக்கம் | 31 ஆகத்து 1957; 66 ஆண்டுகள் முன்னர் (1957-08-31) |
முதலாமவர் | துங்கு புவான் பெசார் குர்சியா நெகிரி செம்பிலான் அரசியார் குர்சியா |
இணையதளம் | istananegara.gov.my |
மூடு
1957-ஆம் ஆண்டு, பிரித்தானியாவிடம் இருந்து மலாயா கூட்டரசு தன்னுரிமை பெற்ற போது, மலேசிய அரசர் பதவி உருவாக்கப்பட்டது. அரச அமைப்புக்கு உட்பட்ட ஒரு முடியரசு நாடான மலேசியாவில், மாமன்னராகத் தேர்வு செய்யப்பட்ட ஓர் அரசர், மலேசிய நாட்டின் அரசத் தலைவர் ஆகிறார். மலேசிய அரசியலமைப்பின் கீழ் அவரின் துணைவியார் மலேசிய நாட்டின் பேரரசியாக அறியப்படுகிறார்.