மலேசிய விடுதலை நாள்
மலேசியாவில் தேசிய விடுமுறை, ஆண்டுதோறும் ஆகஸ்ட் 31 அன்று அனுசரிக்கப்படுகிறது / From Wikipedia, the free encyclopedia
மலேசிய விடுதலை நாள் (மலாய்:Hari Merdeka) என்பது 1957 பிரித்தானிய காலணி ஆட்சியிடமிருந்து மலாயா கூட்டமைப்பு விடுதலை பெற்ற நாளாக 31 ஆகத்து அன்று கொண்டாடப்படுகிறது. மலேசிய நாளுடன் (மலாய்:Hari Malaysia) இதனை குழப்பிக்கொள்ளக்கூடாது. 16 செப்டம்பர் 1963 அன்று மலாயா கூட்டமைப்பு, சரவாக், வட போர்னியோ மற்றும் சிங்கப்பூர் ஆகியவை சேர்ந்து மலேசியாவாக உருவான நாளை மலேசியா நாளாக கொண்டாடப்படுகிறது.