மென்டிஸ்
From Wikipedia, the free encyclopedia
மென்டிஸ் (Mendes (கிரேக்கம்: Μένδης) பண்டைய கீழ் எகிப்தில் நைல் நதி வடிநிலத்தின் கிழக்கே அமைந்துள்ளது. பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தின் கீழ் எகிப்தை ஆண்ட 29-ஆம் வம்சத்தவர்களின் தலைநகரம் மென்டிஸ் நகரம் ஆகும். மென்டிஸ் (30°57′30″N 31°30′57″E) பாகையில் அமைந்துள்ள தொல்லியற்களங்கள் கொண்ட நகரம் ஆகும். இந்நகரம் எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமிப் பேரரசின் கீழ் இருந்தது. மேலும் பாரசீகர்களின் அகாமனிசியப் பேரரசு மற்றும் உரோமைப் பேரரசின் கீழ் ஒரு மாகாணமாக இருந்தது.
விரைவான உண்மைகள் மென்டிஸ் Djedet, நாடு ...
மென்டிஸ்
Djedet | |
---|---|
ஆள்கூறுகள்: 30°57′30″N 31°30′57″E | |
நாடு | எகிப்து |
ஆளுநகரம் | தகாலியா ஆளுநகரம் |
நேர வலயம் | ஒசநே+2 (எகிப்திய சீர் நேரம்) |
• கோடை (பசேநே) | +3 |
மூடு