மைக்குரோனீசியா
From Wikipedia, the free encyclopedia
மைக்குரோனீசியா (Micronesia, [ˌmaɪkroʊˈniʒə] (உதவி·விவரம்), என்பது ஓசியானியாவின் ஒரு பிரிவாகும். இது பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சிறு தீவுகளை உள்ளடக்கியது. இதன் வடமேற்கே பிலிப்பீன்ஸ், மேற்கு மற்றும் தெற்கே இந்தோனீசியா, பப்புவா நியூ கினி, மெலனீசியா, கிழக்கே பொலினீசியா ஆகியனவும் அமைந்துள்ளன. மைக்குரோனீசியா என்னும் சொல் கிரேக்க மொழியில் μικρός (சிறிய), νῆσος (தீவு), அதாவது சிறிய தீவுகள் என்று பொருள். மைக்குரோனீசியா என்ற சொல் இப்பிரதேசத்திற்கு முதன் முதலில் 1831 ஆம் ஆண்டில் தரப்பட்டது.