யாவோ மக்கள்
சீனா மற்றும் வியட்நாம் நாடுகளில் வாழ்கின்ற ஓர் இனக்குழுவினர் / From Wikipedia, the free encyclopedia
யாவோ மக்கள் (Yao people) என்பவர்கள் சீனா மற்றும் வியட்நாம் நாடுகளில் வாழ்கின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் சீனாவில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இன சிறுபான்மையினரில் ஒன்றாவர். இவர்கள் சீனாவின் தென்மேற்கு மற்றும் தெற்கு மலைப்பகுதிகளில் வசிக்கின்றனர். இவர்கள் வியட்நாம் அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 54 இனக்குழுக்களில் ஒன்றாவர்.
2010 சீன சனத்தொகைக் கணக்கெடுப்பில் ஏறத்தாழ 28 இலட்சம் யாவோ மக்கள் சீனாவில் இருந்தனர். 2019 வியட்நாமிய சனத்தொகைக் கணக்கெடுப்பில், அந்த நாட்டில் ஏறத்தாழ ஒன்பது இலட்சம் யாவோ மக்கள் இருந்தனர். மேலும் அமெரிக்காவில் ஏறத்தாழ அறுபது ஆயிரம் யாவோக்கள் பெரும்பாலும் மேற்கு கடலோர மாநிலங்களில் வசிக்கின்றனர்.