லாகோஸ்
From Wikipedia, the free encyclopedia
லாகோஸ் /ˈleɪɡɒs/[3] (அல்லது லேகோஸ்) நைஜீரியாவில் லோகோசு மாநிலத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இந்நகரமும் அதைச் சூழ்ந்துள்ள புறநகர் பகுதிகளும் ஆப்பிரிக்க கண்டத்தின் பெரிய நகரங்களுள் ஒன்றாக உள்ளன. இது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களுள் ஒன்றாகவும்,[4][5][6][7][8][9][10] அதிக மக்கள் தொகை நிறைந்த நகர்புற திரட்சியாகவும் உள்ளது.[11][12] லாகோஸ் ஆப்பிரிக்காவின் முக்கிய பொருளாதார மையம் ஆகும்; இந்தப் பெருநகரம் அதிக உள்நாட்டு உற்பத்தி அளவையும், கண்டத்தின் மிகப்பெரிய மற்றும் பரபரப்பான துறைமுகங்களுள் ஒன்றையும் கொண்டுள்ளது.[13][14][15]
லாகோஸ், நைஜீரியா | |
---|---|
விக்டோரியா தீவின் அருகிலுள்ள துறைமுகத்திலிருந்து பார்க்கும் போது லாகோஸ் | |
அடைபெயர்(கள்): Eko | |
முக்கிய நகரப்பகுதிகளைக் காட்டும் லாகோசின் நகரப் படம் | |
நாடு | நைஜீரியா |
மாநிலம் | லாகோஸ் மாநிலம் |
LGA | லாகோஸ் தீவு |
பரப்பளவு[1] | |
• நகரம் | 8.7 km2 (3.3 sq mi) |
• நகர்ப்புறம் | 999.6 km2 (385.9 sq mi) |
மக்கள்தொகை (2006 census, preliminary)[2] | |
• நகரம் | 209,437 (Lagos Island LGA) |
• அடர்த்தி | 24,182/km2 (62,631/sq mi) |
• நகர்ப்புறம் | 7,937,932 (Metropolitan Lagos)
|
• நகர்ப்புற அடர்த்தி | 7,941/km2 (20,568/sq mi) |
நேர வலயம் | CET (ஒசநே+1) |
• கோடை (பசேநே) | CEST (ஒசநே+1) |
இணையதளம் | http://www.lagosstate.gov.ng/ |
லாகோஸ் ஆரம்ப காலத்தில் தீவுக்கூட்டங்களில் இருந்து தோன்றிய துறைமுக நகரமாக இருந்தது, அந்த தீவுகள் தற்போது உள்ளூர் அரசு பகுதிகளான லாகோஸ் தீவுகள், எடி ஓசா, அமுவா ஓடோபின் மற்றும் அபாபாவில் அமைந்துள்ளன; தீவுகள் லாகோஸ் கடற்காயலில் இருந்து தோன்றும் சிறுகுடாக்களினால் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் அவை முகவாயின் கிழக்கு மேற்காக 100 கீமீ (60 மைல்) வரை பரவியுள்ள பவளத் தீவுகள், மணற் திட்டுகள் மற்றும் நீரிடைக் கடற்கரை போன்றவற்றால் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளன. விரைவாக நகரமயமாதலின் காரணத்தால் நகரானது கடற்காயலின் மேற்கே தற்போது லாகோஸ் நிலப்பகுதி, அஜிரோமி - லிபோடின் சுருலெரே வரை விரிவடைந்துள்ளது. இதன் காரணமாக லாகோஸ் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது: தீவுப்பகுதி, ஆரம்ப கால லாகோஸ் நகரம் மற்றொன்று நிலப்பகுதி,ref name="Lagos Case Study">"CASE STUDY OF LAGOS" (PDF). Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 November 2015. {{cite web}}
: Check date values in: |archive-date=
(help)</ref> விரிவடைந்த நகரப்பகுதி. 1967 இல் லாகோஸ் மாநில உருவாக்கத்திற்கு முன்பு வரை நகரப் பகுதியானது, லாகோஸ் நகர குழுவினால் மைய அரசால் நேரடியாக ஆட்சி செய்யப்பட்டு வந்தது. மாநில உருவாக்கத்தின் மூலம் மேற்கு பகுதியைத் தவிர்த்து லாகோஸ் நகரானது ஏழு உள்ளூர் அரசு பகுதிகளாக பிரிக்கப்பட்டது (தற்போது அவற்றையும் சேர்த்து 13 உள்ளூர் அரசுப் பகுதிகள் உள்ளன).
1914 இல் நைஜீரிய ஒருங்கிணைப்பிலிருந்து லாகோசானது அதன் தலைநகராகவும், பின்னர் லாகோசு மாநில உருவாக்கத்திற்கு பின் அதன் தலைநகராகவும் இருந்துவந்தது. ஆனால் 1976 இல் மாநிலத் தலைநகரானது இக்ஜாவிற்கு மாற்றப்பட்டது, அதேவேளையில் 1991 இல் கூட்டாட்சியின் தலைநகரானது அபூஜாவிற்கு மாற்றப்பட்டது. இருப்பினும் லாகோசானது ஒரு நகரமாக பரவலாக அறியப்பட்ட வந்தது. தற்போதைய லாகோசு, "பெருநகர லாகோசு" என்றும் அறியப்படுவது, அதிகாரப்பூர்வமாக "லாகோசு பெருநகரப் பகுதி",[16][17][18] ஒரு நகர்புற திரட்சியாகவும் அல்லது தொகுதியாகவும் உள்ளது.[19] இதில் மாநிலத் தலைநகரான இகெஜா உட்பட 16 உள்ளூர் ஆட்சிப் பகுதிகள் உள்ளன. இந்த நகரத்தொகுதியானது லாகோசு மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 37% ஆக்கிரமிப்பதுடன், மாநில மக்கள் தொகையில் 85% கொண்டுள்ளது.
லாகோசின் சரியான மக்கள் தொகை குறித்து குழப்பம் நிலவுகிறது. 2006 ஆம் ஆண்டிற்கான கூட்டாட்சியின் மக்கள் தொகை கணக்கீட்டின் படி, மாநகரத்தில் 8 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் இது மாநில அரசால் மறுக்கப்பட்டது. பின்னர் லாகோசு மாநில அரசு அதன் மக்கள்தொகை தரவின் வெளியிட்டது, அதன்படு நகரின் மக்கள்தொகை தோராயமாக 16 மில்லியன் ஆகும். 2015 இல் அதிகாரப்பூர்வமற்ற மக்கள்தொகை கணக்கெடுப்புகள், லாகோசு மற்றும் அதைச் சூழ்ந்துள்ள ஓகுன் மாநிலம் வரை நீட்சியடையும் பெருநகரப் பகுதிகளை உள்ளடக்கிய "பெருநகர லாகோசின்" மக்கள்தொகை தோராயமாக 21 மில்லியன்கள் என்கிறது.