தில்லியில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
வடக்கு தில்லி மாவட்டம் வட இந்தியாவின், தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நரேலா நகரம் ஆகும்.
வடக்கு தில்லி | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
அரசு | |
• நிர்வாகம் | தேசிய தலைநகர் வலயம்-NCT |
பரப்பளவு | |
• மொத்தம் | 443 km2 (171 sq mi) |
ஏற்றம் | 213 m (699 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 36,56,539 |
• அடர்த்தி | 8,254/km2 (21,380/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிக்ள் | இந்தி ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அருகே அமைந்த நகரங்கள் | சோனிபத் மற்றும் காசியாபாத் |
மக்களவைத் தொகுதி | வடக்கு தில்லி |
உள்ளாட்சி நிர்வாகம் | தேசிய தலைநகர் வலயம் |
வடக்கு தில்லி மாவட்டத்தின் கிழக்கில் யமுனை ஆறு, வடகிழக்கு தில்லி மாவட்டம்; வடக்கிலும், மேற்கிலும் வடமேற்கு தில்லி மாவட்டம்; தென்மேற்கில் மேற்கு தில்லி மாவட்டம்; தெற்கில் மத்திய தில்லி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
வடக்கு தில்லி மாவட்டம் மாடல் நகரம் (தில்லி)[2] நரேலா மற்றும் அலிப்பூர் (தில்லி) என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டது.
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3,656,539 ஆக உள்ளது. நகரப்புறங்களில் 94.15% மக்களும்; கிராமப்புறங்களில் 5.85% மக்களும்; வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 27.81% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,960,922 ஆண்களும்; 1,695,617 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 865 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 443 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 8,254 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 84.45 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 89.66 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 78.41 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 449,894 ஆக உள்ளது. [3]
இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 3,211,042 (87.82 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 291,330 (7.97 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 43,460 (1.19 %) ஆகவும்; சீக்கிய சமய மக்கள் தொகை 92,129 (2.52 %) ஆகவும்; கிறித்தவ மக்கள் தொகை 14,100 (0.39 %) ஆகவும்; பௌத்த சமய மக்கள் தொகை 2,281 (0.06 % ) உள்ளது.
தேசிய தலைநகர் வலயத்தின்-NCT ஆட்சி மொழிகளான இந்தி மற்றும் ஆங்கில மொழியுடன், பஞ்சாபி, உருது, தமிழ் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான மாநில மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.