வாதூசு
From Wikipedia, the free encyclopedia
வாதூசு என்பது லீக்கின்ஸ்டைன் நாட்டின் தலைநகரமும் அந்நாட்டின் நாடாளுமன்ற ஆசனமும் ஆகும். இந்நகரம் ரைன் நதிக்கு அண்மையில் அமைந்துள்ளது. இங்கு அண்ணளவாக 5,100 குடிமக்கள் (2009 சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி) வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் உரோமன் கத்தொலிக்க மதத்தைப் பின்பற்றுகின்றனர். சர்வதேச ரீதியிலும் நகராட்சியிலும் இந்நகரம் அனைவராலும் அறியப்பட்டதாகும். இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 455 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் மொத்தப் பரப்பளவு 17.3 சதுர கிலோமீற்றர்கள் ஆகும்.
விரைவான உண்மைகள் வாதூசு, நாடு ...
வாதூசு | |
---|---|
Vaduz and its exclaves in Liechtenstein | |
நாடு | லீக்கின்ஸ்டைன் |
கிராமங்கள் | எபென்கோல்ஸ் |
அரசு | |
• வகை | மன்னராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 17.3 km2 (6.7 sq mi) |
ஏற்றம் | 455 m (1,493 ft) |
மக்கள்தொகை (2014-12-31) | |
• மொத்தம் | 5,425 |
• அடர்த்தி | 288/km2 (750/sq mi) |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
தபால் எண் | 9490 |
Area code | 7001 |
ஐஎசுஓ 3166 குறியீடு | LI-11 |
இணையதளம் | www.vaduz.li |
மூடு