விக்கிப்பீடியா:நிர்வாகிகள்
From Wikipedia, the free encyclopedia
நிர்வாகிகள் "கட்டக இயக்குனர் (sysop) உரிமை"யுள்ள விக்கிபீடியர்களாவர். இவர்களது பணியின் பண்புகளைத் துல்லியமாக உணர்த்தும் வண்ணம் பல வேளைகளில் இவர்கள் முறைமைச் செயற்படுத்துநர்கள் என்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் என்றும் அழைக்கப்படுவதுண்டு. சில காலம் விக்கிபீடியாவில் செயற்பாடுள்ள பங்களிப்பாளராக இருப்பதுடன், பொதுவாக அறியப்பட்ட, நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும் உறுப்பினர் எவருக்கும் இந்தப் பொறுப்பை வழங்குவது, தற்போது விக்கிபீடியாவின் கொள்கையாக இருந்துவருகிறது. நடைமுறையில் சீர்தரங்கள்(standards) கடினமடைந்து வருகின்ற போதிலும், நிர்வாகிகள் உருவாக்கப்படத்தான் செய்கின்றனர். தற்போது தமிழ் விக்கிப்பீடியாவில் 33 நிர்வாகிகள் உள்ளனர்.
விக்கிப்பீடியாவின் நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் கூறுகிறார்: "இது ஒரு பெரிய விடயமே அல்ல - This should be no big deal"
தொகுத்தல் பொறுப்புகள் தொடர்பில், நிர்வாகிகளுக்குச் சிறப்பு அதிகாரங்கள் எதுவும் கிடையாது என்பதுடன், அவர்கள் ஏனைய பயனர்களுக்குச் சமமானவர்களே. இவர்கள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக, செயற்பாடு மற்றும் பாதுகாப்பு அடிப்படையிலமைந்த பல்வேறு கட்டுப்பாடுகளிலிருந்து இவர்களுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. எனினும், அனைத்துப் பயனர்களினதும் தீர்மானங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது தவிர வேறெந்த சிறப்பு அதிகாரங்களும் இவர்களுக்குக் கிடையாது என்பதைக் கவனிக்கவும். மேலதிக நிர்வாகச் செயற்பாடுகள் எதுவும் கொடுக்கப்படாதபோதும், பொய்யாகத் தாங்கள் நிர்வாகிகளென உரிமை கோராதவரை, எந்தப் பயனரும் ஒரு நிர்வாகி போலவே நடந்துகொள்ள முடியும். இவ்வாறான பயனர்கள் வேறு பயனர்களால் நிர்வாகி பொறுப்புக்கு நியமனம் செய்யப்படவும், பின்னர் அப் பொறுப்புக்குத் தேர்வுசெய்யப்படவும் கூடிய சந்தர்ப்பம் உண்டு.
நிர்வாகிகளுக்கு வழங்கப்படுகின்ற மேலதிக அணுக்கம் தேவைப்படும் வேலைகளைச் செய்வதற்காக, இச் சமுதாயம் நிர்வாகிகளை எதிர்பார்த்துள்ளது. இவற்றுள், நீக்கலுக்கான வாக்களிப்பு விவாதங்களைக் கவனித்தல், ஒருமனதான தீர்மானங்களின் அடிப்படையில் கட்டுரைகளை நீக்குதல் அல்லது அவற்றை வைத்திருத்தல், புதிய மற்றும் மாற்றப்படுகின்ற கட்டுரைகளைக் கவனித்து வெளிப்படையான நாசவேலைகளை நீக்கிவிடல், மற்றும் நிர்வாகி அணுக்கம் தேவைப்படும் விடயங்களில் பிற பயனர்களால் கோரப்படும் உதவிகளைச் செய்தல் என்பன அடங்கும். நிர்வாகிகள், சமுதாயத்தின் அநுபவம் உள்ள உறுப்பினர்களாக இருப்பர் என எதிர்பார்க்கப்படுவதால், உதவி தேவைப்படும் பயனர்கள், ஆலோசனைகளுக்கும் தகவல்களுக்கும் ஒரு நிர்வாகியையே பொதுவாக நாடுவர்.