ஆங்காங்
சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
ஒங்கொங் அல்லது ஆங்காங் அல்லது ஹாங்காங் (Hong Kong Special Administrative Region, HKSAR, சீன மொழியில்: 香港) பிரித்தானிய முடிக்குரிய குடியேற்ற நாடுகளில் ஒன்றாக இருந்தது. 1997 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் [1] இரண்டில் ஒன்றானது.[2] மற்றொன்று மக்காவ் ஆகும். இருப்பினும் ஒரு நாடு இரு கொள்கைகள்[3] எனும் அடிப்படையில் பிரித்தானிய சட்டத் திட்டங்களுக்கு அமைவாக ஒங்கொங் தமக்கென தனித்துவமான தன்னாட்சி அதிகாரங்களுடன் கூடிய பொருளாதார நிர்வாகச் சட்டங்களைக் கொண்டுள்ளது. அதாவது ஒங்கொங் தனித்துவமான நாணயம், சட்டத் திட்டங்கள், அரசியல் முறைமை, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு விதிமுறைகள், பாதை விரிவாக்க அபிவிருத்தித் திட்டங்கள் போன்றன முற்றிலும் வேறானதும் தனித்துவமானதும் கொள்கைகளைக் கொண்டுள்ளது. உலகின் அதிக புழக்கத்தில் உள்ள நாணயங்களில் ஒங்கொங் டொலர் 9 வது அதிக புழக்கத்தில் உள்ள நாணயமாகும்.[4] மக்கள் தொகையைப் பொருத்த மட்டில் உலகில் மக்கள் நெரிசல் கூடிய இடங்களில் ஒங்கொங்கும் ஒன்றாகும்.[5] ஒங்கொங் உலகின் அதி வளர்ச்சியடைந்த பொருளாதார மையங்களில் ஒன்றாகும்.[6]
சீன மக்கள் குடியரசின் ஒங்கொங் சிறப்பு நிர்வாகப் பகுதி 中華人民共和國香港特別行政區 Hong Kong Special Administrative Region of the People's Republic of China | |
---|---|
குறிக்கோள்: கிடையாது | |
நாட்டுப்பண்: 义勇军进行曲 தொண்டர்களின் அணிவகுப்பு | |
தலைநகரம் | கிடையாது1 |
பெரிய நகர் | சா டின் மாவட்டம் |
ஆட்சி மொழி(கள்) | கண்டனீஸ் (சீனம்), ஆங்கிலம் |
அரசாங்கம் | |
• தலைமை அதிகாரி | கார்ரி லாம் |
நிறுவப்படுதல் | |
• ஐக்கிய இராச்சியத்தின் ஆக்கிரமிப்பு | சனவரி 1, 1841 |
• ஐக்கிய இராச்சியத்தின் கொலனி பிரதேசமாக அறிவிப்பு | ஆகஸ்டு 29, 1842 |
• சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாகப் பகுதி | யூலை 1, 1997 |
பரப்பு | |
• மொத்தம் | 1,104 km2 (426 sq mi) (--) |
• நீர் (%) | 4.6% |
மக்கள் தொகை | |
• 2005 மதிப்பிடு | 7,041,000 (97வது) |
• 2001 கணக்கெடுப்பு | 6,708,389 |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2005 மதிப்பீடு |
• மொத்தம் | $254.2 billion (40வது) |
• தலைவிகிதம் | $37,400 (2006வது) |
மமேசு (2004) | 0.927 அதியுயர் · 22வது |
நாணயம் | ஒங்கொங் டாலர் (HKD) |
நேர வலயம் | ஒ.அ.நே+8 (HKT) |
ஒ.அ.நே+8 | |
அழைப்புக்குறி | 852 மக்காவ்விலிருந்து 01 |
இணையக் குறி | .hk |
1வரலாற்று ரீதியாக விக்டோரியா ஒங்கொங் பகுதியின் தலைநகராக இருந்தது. அரசு தலைமையகம் மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ளது. |
இன்று பார்க்கும் இடங்களெல்லாம் வானுயர் கட்டிடங்கள், மாடி மனைகள், அதிவேகப் பாதைகள், திகைக்கவைக்கும் மேம்பாலங்கள் என பொருளாதார வளர்ச்சியிலும், நாகரீக உச்சத்திலும் முன்னிலை வகிக்கும் நாடுகளில் இதுவும் ஒன்றாகும். இது "ஆசியாவின் நகரம்" (Asia's City) என்று செல்லப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது.